ரங்கா ஃபிலிம் கம்பெனி சார்பில் அறிமுக இயக்குநர் ரங்கா, தயாரித்து இயக்கி நடித்திருக்கும் ஆக்சன் திரில்லர் டிராமா திரைப்படம். தென் சென்னை. இவ்வாரம் வெளியாகும் இப்படம் பத்திரிக்கையாளர்களுக்கென பிரத்தியேகமாக முன் திரையிடல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த தவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்…

நடிகர் இளங்கோ பேசியதாவது…
இயக்குநர் என்னிடம் கதை சொன்ன போது, எப்படி என்னை பாரில் இருக்கும் கேரக்டருக்கு தேர்ந்தெடுத்தீர்கள்? எனக் கேட்டேன். ஆனால் அவர் உங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பார்த்திருக்கிறேன் அதில் ஸ்டைலாக டிரெஸ்ஸிங் செய்வதைப் பார்த்துத் தேர்ந்தெடுத்தேன் என்றார். ஒரு காட்சி எடுக்கும் முன், அதை நண்பர்களை வைத்து, போனில் எடுத்து, அதைக்காட்டி தான் எடுப்பார். அந்தளவு தயாராக இருப்பார். என்ன தேவையோ அதைச் சரியாக வாங்கி விடுவார். படக்குழு என்னை மிக நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். படம் மிக அருமையாக வந்துள்ளது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

நடிகர் நிதின் மேத்தா பேசியதாவது…
கதை சொன்ன போது வில்லனாக இருந்தாலும் அது தனித்தன்மையோடு இருந்தது. எல்லா வில்லன்களும் தனிப்பட்ட வாழ்க்கையில் மிக நல்லவர்கள். என்னை வில்லனாக நடிக்க வைப்பதில் வருத்தமில்லை, அதில் என் திறமையைக் காட்டி ரசிகர்களை ஈர்க்க வேண்டும் என்பது தான் என் விருப்பம். இந்தப்படத்தில் அது நடந்திருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் ரங்கா பற்றி எதுவுமே தெரியாது. அவர் புதுமுகமாக இருந்தாலும் அவர் என் கதாபாத்திரத்தைப் பற்றிக் கூறியபோது, அவரது உற்சாகம் எனக்குப் பிடித்திருந்தது. அவர் படத்தை மிக நன்றாக இயக்கியுள்ளார். எல்லோரையும் மிக நன்றாகப் பார்த்துக் கொண்டார். படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் கண்டிப்பாகப் படத்தை ரசிப்பார்கள் நன்றி.

நாயகி ரியா பேசியதாவது…
இந்தப்படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இயக்குநர் எனக்கு ரொம்ப சப்போர்ட் செய்வார், மிகப் பொறுமையாக எல்லாமே சொல்லித் தருவார். கேமரா மேன் சரத் எங்களை மிக அழகாகக் காட்டியுள்ளார். மொத்த டீமும் கடுமையாக உழைத்துள்ளனர் அனைவருக்கும் இந்தப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் சரத்குமார் மோகன் பேசியதாவது…
என்னோட கெரியர் ஸ்டார்ட் ஆனது இண்டிபெண்டண்ட் ஃபிலிம் மூலமாகத் தான் என் மீது நம்பிக்கை வைத்து, இப்படத்தில் வாய்ப்பளித்த இயக்குநருக்கும், என்னை அறிமுகப்படுத்தி வைத்த மகேஷ் முத்துசாமி சாருக்கும் நன்றி. என் டீம் சப்போர்ட் இல்லாமல் இந்தப்படம் சாத்தியமே இல்லை. அவர்கள் அனைவருக்கும் நன்றி. நடிகர்கள் எல்லோரும் மிகப்பெரிய சப்போர்ட் தந்தார்கள். அனைவருக்கும் நன்றி.

நடிகர் திலீபன் பேசியதாவது…
முதலில் ரங்கா சாரை பற்றிச் சொல்ல வேண்டும். ஐடி கம்பெனியில் இருந்து வந்து, மூன்று பெரும் பொறுப்புகளைத் தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ என ஏற்றுக்கொண்டு அதில் சாதித்துள்ளார். எல்லோருக்கும் பொறுப்புகளைப் பிரித்துத் தந்து ஊக்கப்படுத்துவார். ரங்கா மிக கேஷுவலாக வேண்டுமென்பதை கேட்டு வாங்கி விடுவார். நிறைய புது இயக்குநர்கள் படத்தில் நடித்துள்ளேன். இந்தப்படத்தை மிக நன்றாக எடுத்துள்ளனர். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். படம் இன்று வெளியாகியுள்ளது உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் வத்சன் பேசியதாவது….
எங்களுக்கு ஆதரவளித்த எல்லோருக்கும் நன்றி. வாசு சார் தான் எனக்கு ரங்காவை அறிமுகப்படுத்தினார். அவருக்கு நன்றி. ரங்கா முதலில் டெஸ்ட் ஷீட் செய்ய வேண்டும் என்று சொன்ன போதே மிகச் சந்தோசமாக இருந்தது. நான் தியேட்டர் ஆர்டிஸ்ட் எனவே அவர் ரிகர்சல் செய்து போகலாம் எனச் சொன்னது சந்தோசமாக இருந்தது. இந்தப்படத்தை எடுத்ததை விட இரண்டு வருடமாகக் காத்திருந்து அதை இந்த இடத்திற்குக் கொண்டு வந்துள்ளார் ரங்கா. அவருக்காகக் கண்டிப்பாக இப்படம் ஜெயிக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் ரங்கா பேசியதாவது…
தென் சென்னை படத்தைத் தயாரித்து, நடித்து இயக்கியுள்ளேன். ஆக்சன் திரில்லர் அனைவருக்கும் பிடிக்கும், ஃபேமிலி ஆக்சன் டிராமாவாக இப்படத்தை எடுத்துள்ளோம். உங்கள் எல்லோருக்கும் பிடித்திருக்குமென நம்புகிறேன். சின்ன வயசிலிருந்து கிரிக்கெட், சினிமா தான் எனக்குப் பிடித்த விசயம். இப்போது தான் படம் செய்யும் வாய்ப்பு அமைந்தது. கொரோனா காலத்தில் இந்த ஐடியா வந்தது. நண்பர்களின் உதவியால் இந்தப்படத்தை எடுத்துள்ளேன். அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன். என் நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோரும் பெரும் ஆதரவாக இருந்தார்கள். எல்லோரும் கடினமாக உழைத்துள்ளார்கள். கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும், இப்படத்தை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இப்படத்தில் ரங்கா, ரியா முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, இளங்கோ குமரன், திலீபன், வத்சன், நடராஜன், சுமா, விஷால், ராம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் ரங்கா எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைக்க, சரத்குமார் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இளங்கோவன் எடிட்டிங் செய்துள்ளார். மக்கள் தொடர்பு பணிகளை ஹேமானந்த் செய்துள்ளார்.

இப்படம் டிசமபர் 13 முதல் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கதாபாத்திரம்

ரங்கா – ஜேசன் (கதாநாயகன்)
ரியா – மேகா (கதாநாயகி)
இளங்கோ குமணன் – டோனி (கதாநாயகன் மாமா)
சுமா – மரியா (கதாநாயகன் தாய்)
தாரணி – தாரா (கதாநாயகன் அக்கா)
நிதின் மேஹ்தா – ருத்ரா (வில்லன் 1)
திலீபன் – சிவக்குமார் (இன்ஸ்பெக்டர்)
தன்ஷிவி, நித்யநாதன் – கிருஷ்ணா (குழந்தை)
வத்ஷன் எம் நட்ராஜன் – எஸ் கே (வில்லன் 2)

தொழில்நுட்ப வல்லுநர்கள் விபரம்

எழுத்து & இயக்கம் : ரங்கா
ஒளிப்பதிவாளர்: சரத்குமார் எம்
எடிட்டிங் தொகுப்பாளர்: இளங்கோவன் சி எம்
பின்னணி இசை : ஜென் மார்டின்
பாடல் இசை : சிவ பத்மயன்
பாடல் : ரங்கா
பாடியவர் : நரேஷ் ஐயர்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : மாரிமுத்து
வண்ணம் – சிட்டகாங்
தயாரிப்பாளர்: ரங்கா ஃபிலிம் கம்பனி
மக்கள் தொடர்பு – ஹேமானந்த்

Thanks & Regards,
PRO Hemananth

YouTube player

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.