ராஜ்ஸ்ரீவென்ச்சர்ஸ் சார்பில் ஸ்ரீவித்யா ராஜேஷ் பி. ராஜேஷ் குமார் தயாரித்திருக்கும் மழையில் நனைகிறேன் படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் டி.சுரேஷ் குமார்.

வசதி படைத்த தம்பதிகளான கிருத்துவ மதத்தைச் சேர்ந்த மேத்யூ வர்கீஸ் – அனுபமா குமார் இவர்களுக்கு ஒரே மகன் அன்சன் பால். பட்டபடிப்பை அரியர்ஸ் வைத்து முடிக்காமல் கவலையின்றி ஜாலியாக தன் நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறார். அவரது தந்தையின் கண்டிப்பை கண்டு கொள்ளாமல் தன் தாயின் அரவணைப்பு பாசத்தால் பணத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார். இதனிடையே அன்சல் பால் ஜாலியான வாழ்க்கையில் ஒரு நாள் ரெபா ஜானை கடற்கரையோரம் மழையில் நனைந்தபடி வருவதை பார்க்க நேரிட முதல் பார்வையிலேயே காதலிக்க தொடங்குகிறார். அமெரிக்காவில் எம்எஸ் படிக்க விண்ணப்பித்து அதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கும் ஐயங்கார் பெண் ரெபா என்பதை தெரிந்து கொள்கிறார்.அன்சன் தன் நண்பனின் அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோர், தங்கை,தம்பியுடன் வசிக்கும் ரெபாவை தினமும் பின் தொடர்கிறார். ரெபாவிடம் தன் காதலை தெரிவிக்கிறார் அன்சன். ஆனால் ரெபா அன்சனின் காதலை நிராகரித்து தன் எதிர்கால படிப்பும் கனவை பற்றிச் சொல்லி எச்சரித்து அனுப்புகிறார். நாளடைவில் அன்சனின் பொறுமையும் நம்பகத்தன்மையும் ரெபாவை காதலில் விழ வைக்கிறது. தன் காதலை சொல்ல அன்சனுடன் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது பயங்கர விபத்து ஏற்படுகிறது. இறுதியில் இருவருக்கும் என்னானது? விபத்தில் இருவரும் உயிர் பிழைத்தார்களா? ? அதன் பின் ரெபாவால் அன்சனிடம் காதலை சொல்ல முடிந்ததா? மதங்களை கடந்து மணம் செய்து கொண்டார்களா என்ற காட்சிகளுக்கு பின் காட்டப்படும் முக்கிய திருப்பம் என்ன?  என்பதே எதிர்பாராத க்ளைமேக்ஸ{டன் கதை முடிகிறது.மலையாள சினிமாவில் சிறந்த கதாபாத்திரங்ளை தேர்ந்தெடுத்து நடித்து புகழ்பெற்ற அன்சன் பால், ஒரு பாராட்டத்தக்க நடிப்பை வழங்குவதோடு கவலையற்ற இளைஞனாக ஜாலி பேர்வழியாக, ஒரு தலை காதலில் தவித்து, நிராகரிப்பை ஒத்துக்கொண்டாலும், விடாமுயற்சியில் வென்ற அர்ப்பணிப்புள்ள காதலனாக, பொறுப்பை உணரும் அவரது கதாபாத்திரத்தின் மாற்றத்தை திறம்பட சித்தரித்துள்ளார்.

அமெரிக்காவில் படிப்பு ஆர்வத்துடன் ஒரு உற்சாகமான இளம் பெண்ணாக ரெபா ஜான் இளமை துள்ளலுடன், காதலியாக ஆழ்ந்த நடிப்பில் வசீகரிக்கிறார்.

மேத்யூ வர்கீஸ் மற்றும் அனுபமா குமார் ஆதரவான யதார்த்தமான பெற்றோர்களாகவும், சிவாவாக கிஷோர் ராஜ்குமார், சேஷாதாரியாக ஷங்கர் குரு ராஜா , அண்ணாமலையாக வெற்றிவேல் ராஜா கதைக்கு வலு சேர்த்து உன்னத நடிப்பை வழங்கியுள்ளனர்.

இப்படத்தில் வசனம்: விஜி மற்றும் கவின் பாண்டியன், இசையமைப்பாளர்: விஷ்ணு பிரசாத், ஒளிப்பதிவு: ஜே. கல்யாண், ஆடை வடிவமைப்பாளர்: ஸ்ரீPவித்யா ராஜேஷ், பாடல் வரிகள்: லலிதானந்த் முத்தழில், கலை இயக்குனர்: என்.என். மகேந்திரன், சண்டைக்காட்சிகள்: டி.ரமேஷ் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு காதல் கதைக்குகேற்ற அழகோவியமாக கொடுத்து அசத்தியுள்ளனர்.

நீண்டு கொண்டே போகும் தேவையில்லாத காதல் காட்சிகளை குறைத்திருக்கலாம் எடிட்டர் ஜி.பி. வெங்கடேஷ்.

மழையில்; ஆரம்பித்து மழையில் முடியும் காதல் கதை. காதலர்கள் தங்கள் அன்பை சொல்லி காதல் துளிர்விட தொடங்கும் போது ஏற்படும் விபத்து, அதன் பின் நடக்கும் சோகம், எதிர்பாராத சவாலை எவ்வாறு கடந்து செல்கிறார்கள், இறுதியில் திடீரென்று காட்டும் எதிர்பாராத உணர்ச்சிகள் நிறைந்த திருப்பம் தான் கதையின் மையக்கரு. மழையில் நனைகிறேன் ஒரு எப்பொழுதும்போல்  எதிர்பார்த்த புத்துணர்ச்சியூட்டும் காதல் கதையாக முதலில் தனித்து நின்று, தனித்துவமான கண்ணோட்டத்தை வழங்கி மகிழ்ச்சிகரமான அனுபவமாக அமைந்து வரும் வேளையில் எதிர்பாராத திருப்பம் என்ற பெயரில் பாதிக்கதை தேவையில்லாத காட்சிகளாக கொடுத்து போல் நினைக்க செய்து விட்டார் இயக்குனர் டி.சுரேஷ் குமார்.

மொத்தத்தில் ராஜ்ஸ்ரீ வென்ச்சர்ஸ் சார்பில் ஸ்ரீவித்யா ராஜேஷ் பி. ராஜேஷ் குமார் தயாரித்திருக்கும் மழையில் நனைகிறேன் எதிர்பாராத திருப்பம் தேவையில்லாத சோகம்​ – கானல் நீர் காதல்​.

அன்சன் பால், ரெபா ஜான், மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார்,  கிஷோர் ராஜ்குமார், ஷங்கர் குரு , வெற்றிவேல் ராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-
உரையாடல்: விஜி மற்றும் கவின் பாண்டியன்,
இசையமைப்பாளர்: விஷ்ணு பிரசாத்,
ஒளிப்பதிவு: ஜே. கல்யாண்,
எடிட்டர்: ஜி.பி. வெங்கடேஷ்,
ஆடை வடிவமைப்பாளர்: ஸ்ரீவித்யா ராஜேஷ்,
பாடல் வரிகள்: லலிதானந்த் முத்தழில்,
கலை இயக்குனர்: என்.என். மகேந்திரன்,
சண்டைக்காட்சிகள்: டி.ரமேஷ்,
வண்ணம்: ரங்கா,
மார்கெடிங் தலைவர்: அஜேஷ் சக்லேச்சா,
ஒலி வடிவமைப்பாளர்: மணிகண்டன்,
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: பழனி கே.ஆனந்த்,
ஒப்பனை: ரவி, ஸ்டில்ஸ்: பி.எம். கார்த்திக்,
வசன வரிகள்: ரெக்ஸ்,
விளம்பர வடிவமைப்புகள்: ஷபீர்.ஜே,
பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா, அப்துல்.ஏ. நாசர்.

 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.