உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் More 4 Production இணைந்து தயாரித்துள்ள படம் ” கண்நீரா ”

இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் மலேசியா வாழ் தமிழர்கள் என்பதை குறிப்பிடத்தக்கது.

கண்நீரா என்பதற்கு கண்ணுக்குள் இருக்கிற நீர் போல என்று பொருள் காதல் என்றாலே கண்ணீருக்கு பஞ்சமிருக்காது, அதோடு படத்தில் நாயகியின் கதாபாத்திரத்தின் பெயர் நீரா எனவே இரண்டையும் இணைத்து ” கண்நீரா ” என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தை மலேசியா வாழ் தமிழர் கதிரவென் இயக்கி நாயகனாக நடித்துள்ளார்.
நயாகியாக சாந்தினி கவுர், மாயா கிளம்மி, நந்தகுமார் NKR ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் கதை எழுதி இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார் கௌசல்யா நவரத்தினம்.

ஒளிப்பதிவு – ஏகணேஷ் நாயர்
இசை – ஹரிமாறன்
பாடல்கள் – கௌசல்யா.N
கலை – குதூஸ் சங்கிலிஷா
நடனம் – மாஸ்டர் சேவியர், மாஸ்டர் முகிலன்.
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
தயாரிப்பு – உத்ரா புரொடக்சன்ஸ் S.ஹரி உத்ரா – More 4 Production
திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நாயகனாக நடித்துள்ளார் – கதிரவென்.

படம் பற்றி இயக்குனர் கதிரவென் பேசியதாவது…

லவ் படம் என்றாலே பேண்டஸி இருக்கும் ஆனால் இது முற்றிலும் மாறுபட்ட மிகவும் யதார்த்தமான காதல் கதை.

நூத்துக்கு தொண்ணூறு சதவீதம் பேர் காதல் Relationship -ல கண்டிப்பா இருப்பாங்க, இல்ல கடந்து வந்திறுப்பாங்க. காதலர்களுக்கு என்னமாதிரியான அணுகுமுறை தேவைப்படுகிறது என்பதை ஆர்ட் ஃபிலிமா இல்லாம கமர்சியல் கலந்து ஜனரஞ்சகமான படமாக உருவாக்கி இருக்கிறோம்.

படம் பார்ப்பவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் என் வாழ்வில் நடந்தது என் ஃபேமிலியில் நடந்தது என்று ரசிகர்களை குளோஸா அவங்க ஹார்டை டச் பண்ற மாதிரியான மிக்ஸ்சான எமோசன்ஸ் இதில் இருக்கு.
படம் பார்ப்பவர்கள் தங்களை நிச்சயம் நெருக்கமாக தொடர்பு படுதிப்பாங்க.

படப்பிடிப்பு முழுவதும் மலேசியா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது என்றார் இயக்குனர் கதிரவென்.

படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.