ராக்கிங் ஸ்டார் யாஷ் சமூக ஊடகங்களில் இந்த போஸ்டரைப் பகிர்ந்துள்ளார், போஸ்டரில் “நாயகனை கட்டவிழ்த்துவிடுகிறோம்…” என்ற டேக்குடன், யாஷ் வெள்ளை நிற டக்ஷீடோ ஜாக்கெட் மற்றும் ஃபெடோரா உடையில் மறைவான நிழலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார், புகை வளையத்தை, ஊதியபடி விண்டேஜ் காரில் சாய்ந்து நிற்கிறார். “இருத்தலியல் நெருக்கடி” என்ற வார்த்தைகள், ஒரு இருண்ட மற்றும் புதிரான பயணத்தைக் குறிக்கிறது.
இந்த போஸ்டரில் 8-1-25 தேதி 10:25 AM அன்று ரசிகர்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது என்று அறிவிக்கிறது.
யாஷ் பிறந்தநாள் நெருங்கி வரும் வேளையில், ரசிகர்கள் 2025 ஆம் ஆண்டில், யாஷின் தரிசனத்துக்காக மிகப்பெரும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். “டாக்ஸிக்” பட தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தளிக்கத் தயாராகி வருகின்றனர்.
KVN புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகியவற்றின் கீழ் வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து தயாரிக்கும், டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ், சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். சன்டான்ஸ் திரைப்பட விழாவில் தேசிய விருது மற்றும் குளோபல் ஃபிலிம்மேக்கிங் விருது உட்பட பல பாராட்டுக்களைப் பெற்ற கீது மோகன்தாஸ், இம்முறை மிகப்பெரிய பொழுதுபோக்கு திரைப்படத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.