பிரைம் வீடியோ வழங்கும் க்ரைம் திரில்லரான சுழல்—தி வோர்டெக்ஸ் சீசன் 2, தொடரின் கதைக்களம் காளிபட்டணம் என்ற ஒரு சிறிய கற்பனை கிராமத்தில் தொடங்கி  அஷ்டகாளி திருநாள் கொண்டாட்டத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது,

புஷ்கர் மற்றும் காயத்ரி எழுத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு,  பிரம்மா மற்றும் சர்ஜுன் கே.எம் இயக்கத்தில் உருவான சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2, குடும்ப உறவுகள், காதல், தியாகம் மற்றும் மனித உணர்வுகளின் இயக்க கூறுகளுடன் பின்னிப்பிணைந்த ஒரு க்ரைம் திரில்லர் ஆகும்.

இந்த தொடரில் கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் தோன்ற அவர்கள் உட்பட லால், சரவணன், கௌரி கிஷன், மோனிஷா பிளெஸ்ஸி, சம்யுக்தா விஸ்வநாதன், ஷ்ரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், ரினி, கலைவாணி பாஸ்கர், அஸ்வினி நம்பியார் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகியோர் அடங்கிய ஒரு மிகப்பெரிய திறமை வாய்ந்த நட்சத்திரப் பட்டாளமே முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளனர்

சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 28 அன்று பிரத்யேகமாக திரையிடப்பட உள்ளது.

மும்பை, இந்தியா—பிப்ரவரி 11, 2025—இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சன ரீதியாக ஏகோபித்த பாராட்டுக்களை பெற்ற அதன் ஒரிஜினல் க்ரைம் த்ரில்லர் தொடர் சுழல்-தி வோர்டெக்ஸ் இன் இரண்டாவது சீசன் பிப்ரவரி 28 அன்று வெளியிடப்படவிருப்பதை இன்று அறிவித்துள்ளது.

விருது வென்ற இந்தத் தொடரின் புதிய சீசனின் கதைக்களம், தமிழ்நாட்டில் காளிபட்டணம் என்ற கற்பனை கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அஷ்டகாளி திருநாள் கொண்டாட்டங்களின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.  

புஷ்கர்  (Pushkar) மற்றும்  காயத்ரி  ( Gayatri) ஆகியோரின் எழுத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு,  பிரம்மா ( Bramma) மற்றும் சர்ஜுன் KM (Sarjun KM) இயக்கத்தில் உருவான இந்தத் தொடரில்,  கதிர் ( Kathir ) மற்றும்  ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh) மீண்டும் முன்னணி வேடங்களில் தோன்றி நடிக்க அவர்களுடன் லால், சரவணன், கௌரி கிஷன், மோனிஷா பிளெஸ்ஸி, சம்யுக்தா விஸ்வநாதன், ஷ்ரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், ரினி, கலைவாணி பாஸ்கர் மற்றும் அஸ்வினி நம்பியார் ஆகியோரும் மேலும்  (Lal, Saravanan, Gouri Kishan, Monisha Blessy, Samyuktha Vishwanathan, Shrisha, Abhirami Bose, Nikhila Sankar, Rini, Kalaivani Bhaskar, மற்றும் Ashwini Nambiar) மஞ்சிமா மோகன் மற்றும் கயல் சந்திரன் ( Manjima Mohan and Kayal Chandran} ஆகியோரும் இணைந்து சிறப்பு வேடத்தில் தோன்ற ஒரு மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே முக்கியவேடங்களில் தோன்றி நடித்திருக்கிறார்கள்.

முதல் சீசனின்  அதிரடியான இறுதிக் கட்டத்தில் சிறையில் ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி காத்திருக்கும் நந்தினி (ஐஸ்வர்யா) தோன்றும் காட்சியுடன் இந்த இரண்டாவது சீசன், அதே விறுவிறுப்புடன் தொடங்குகிறது, அதே சமயம் சக்காரி (கதிர்) ஒரு மர்மங்களால் சூழப்பட்ட வரலாற்றைக் கொண்ட கிராமத்தை சென்றடைகிறார். ஆனால் எதிர்பாராது நிகழும் ஒரு கொலையால் அந்த கிராமமும், கிராம மக்களும் அதிவேகமாகப் பரவும் இருண்ட சூழலுக்குள் தள்ளப்படுகிறார்கள்.

இந்தத் தொடர் இந்தியா மற்றும் உலகம் முழுவதுமுள்ள 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிப்ரவரி 28 அன்று பிரத்தியேகமாக பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஆங்கில சப் டைட்டில்களுடன் ஒளிபரப்பாகிறது .

மனதை பதைபதைக்கச்செய்யும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லரான சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2, அதன் அழுத்தமான கதைக்களம் மற்றும் ஆற்றல் மிக்க உணர்ச்சிகரமான நடிப்பாற்றலுடன் ஒரு விறுவிறுப்பான கதையை ரசிகர்களுக்கு வழங்குகிறது.

குடும்ப உறவுகள், காதல், தியாகம், நேர்மை, பழிவாங்கல் மற்றும் அச்சம் போன்ற உணர்வு பூர்வமான கருப்பொருள்களுடன் பின்னிப்பிணைந்த இந்த சீசனின் கதைக்களம் சிக்கல் நிறைந்த புதிரான காளிபட்டணத்தின் சமூகக் கட்டமைப்பை சீர்குலைக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு மரணத்தைச் சுற்றி வலம் வருகிறது.

மேலும் ஒரு புதிய மர்மத்தையும் கட்டவிழ்க்கிறது. அதே வேளையில் அதன் ஆழத்தில் மறைந்திருக்கும் கண்ணுக்குப் புலப்படாத விசயங்களையும் வெளிக்கொண்டு வருகிறது . மனித உளவியலின் ஆழங்களையும், மற்றவர்களுடனான தனிநபர்களின் முரண்பாடுகளையும் பிரதிபலிக்கும் சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2, பார்வையாளர்களை எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் திடுக்கிடும் மாற்றங்கள் நிறைந்த ரகசியங்கள் மற்றும் பொய்களால் சூழப்பட்ட ஒரு உலகத்திற்குள் கொண்டு சென்று இறுதி வரை அவர்களை இருக்கையின் ஒரு விளிம்பில் வைக்கிறது.

பிரைம் வீடியோ ஒரிஜினல்ஸ் இந்தியா, தலைவர் நிகில் மதோக் கூறியதாவது “வால்வாட்சர் பிலிம்ஸ் உடனான இந்த வெற்றிகரமான கூட்டணியை உருவாக்கி, இந்த ஆரவாரமான தொடரின் இரண்டாவது சீசனை வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். தங்கள் துறையில் தலைசிறந்த நிபுணர்களாக திகழும் புஷ்கர் மற்றும் காயத்ரி, இருவரும் மர்மம் நிறைந்த த்ரில்லர்- பிரிவில் கலாச்சாரப் பின்னணியோடு கதைகளை உருவாக்குவதில் விற்பன்னர்களாகத் திகழ்கிறார்கள் மேலும் இந்த இரண்டாவது சீசனும் எங்களின் பார்வையாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.

வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரிப்பின் கீழ் இந்தத் தொடரை உருவாக்கி வழங்கிய – கதாசிரியர்கள் , படைப்பாளிகளான புஷ்கர் மற்றும் காயத்ரி கூறுகையில், “வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி ஐத் தொடர்ந்து எங்களது இரண்டாவது கூட்டு முயற்சியான சுழல் – தி வோர்டெக்ஸ் -முதல் சீசன் க்கும் கிடைத்த மாபெரும் வரவேற்பு, அன்பு மற்றும் பாராட்டுக்கள் ஒரு மனதை ஈர்க்கக்கூடிய கதைக்களத்தை கொண்ட உள்ளூர் கதைகள் வடிவங்கள், பிராந்தியங்கள் மற்றும் மொழியறிவையும் கடந்து அனைவரையும் சென்றடைய ஸ்ட்ரீமிங் எவ்வாறு வழிவகுத்தமைத்துத் தந்திருக்கிறது என்பதற்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
சுழல் – தி வோர்டெக்ஸ் உலகை மேலும் விரிவடையச்செய்யும் வகையில் ஒரு கற்பனைக் கிராமத்தின் பூர்வீக குடிகளின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த ஒரு இருளடைந்த மர்மமான மற்றும் மனதை சில்லிடவைக்கும் ஒரு கிரைம் மற்றும் அஷ்டகாளி திருவிழாவின் கண்கொள்ளாக் காட்சிகளுடன் ஆழமாகச் சென்று அதன் இரண்டாவது சீசனை நாங்கள் வடிவமைத்தோம்,
பிரம்மா மற்றும் சர்ஜுனின் உன்னதமான இயக்கம், கதிர், ஐஸ்வர்யா மற்றும் லால் ஆகியோரின் அற்புதமான திறமை மிக்க நடிப்பாற்றல் ஆகியவற்றுடன் அனுபவம் வாய்ந்த மற்றும் புதிய திறமைகளின் மாறுபட்ட கூறுகளின் கலவையான திறமை மிக்க நடிகர்களின் குழுவோடும், இந்தத் தொடர் பரந்த அளவிலான பார்வையாளர்களை ஈர்க்கக் கூடிய வகையிலான உள்ளூர் கதைசொல்லலின் பல்துறைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

பிரைம் வீடியோவுடன் கூட்டணி அமைத்து இந்த கிளையுரிமையை கட்டியெழுப்புவதில் நாங்கள் பெரு மகிழ்ச்சியடைகிறோம், அவர்கள் இதன் மூலம் படைப்பாளர்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு மட்டுமல்லாமல், படைப்பாளிகளுக்கு தங்கள் உருவாக்கங்களை காட்சிப்படுத்த மிகப் பெரிய கேன்வாஸை வழங்குவதோடு அவர்களின் கருத்தாக்கங்களை தங்கள் சேவையின் மூலம் உலகளாவிய பார்வையாளர்களுக்கு கொண்டு சென்று காட்சிப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்” .

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.