பிரேம் வீடியோவின் தமிழ் அசல் க்ரைம் திரில்லர் இணைய தொடரான ‘ சுழல் – தி வோர்டெக்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது பாகத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. 

தற்போது தமிழ்நாட்டின் காளிபட்டிணம் எனும் கற்பனை கிராமத்தில் நடைபெறும் வருடாந்திர அஷ்ட காளி திருவிழாவின் பின்னணியில் ஒரு புதிய மர்ம முடிச்சுகளுடன் இந்த இணைய தொடரின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. குடும்ப பிணைப்புகள், காதல், தியாகம், நேர்மை, பழிவாங்கல், பயம் ஆகிய கரு பொருள்களுடன் சுழல்- தி வோர்டெக்ஸ் எனும் இணைய தொடரின் இரண்டாவது சீசனில் காளி பட்டிணத்தின் சிக்கலான சமூக கட்டமைப்பை சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு அதிர்ச்சியூட்டும் மரணத்தை மையமாக கொண்டுள்ளது. அதே தருணத்தில் இதன் பின்னணியில் மறைந்திருக்கும் ரகசியங்களையும் விவரிக்கிறது. ஆனால் மர்மம் மற்றும் சூழ்ச்சியின் புதிய சுழலுக்குள் நுழைவதற்கு முன் சீசன் 1ன் சஸ்பென்ஸ் நிறைந்த பயணத்தை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்.

எச்சரிக்கை : ஸ்பாய்லர்கள்…!

நகரத்தையே உலுக்கும் காணாமல் போதல் :

சிறு நகரத்தை சேர்ந்த நிலா என்ற இளம் பெண் திடீரென காணாமல் போவதுடன் கதை தொடங்குகிறது. அவள் தன் காதலரான இன்ஸ்பெக்டர் ரெஜினாவின் மகனுடன் சேர்ந்து காணாமல் போகிறாள்.

இருண்ட ரகசியங்களை வெளிப்படுத்தும் வகையிலான விசாரணை :

இன்ஸ்பெக்டர் சக்கரை ( கதிர்) இந்த வழக்கின் விசாரணைக்கு பொறுப்பேற்கிறார். ஆனால் ஒரு வழக்கமான காணாமல் போனவர் பற்றிய புகாரை விரைவாக… மிகவும் கொடூரமான ஒன்றாக மாற்றம் பெற்று, இருண்ட ரகசியங்களையும், நீண்ட காலமாக புதைக்கப்பட்ட பொய்களையும் அம்பலப்படுத்துகிறது.

குடும்ப உறவுகள் மற்றும் மறைக்கப்பட்ட பேய்கள் :

தேடல் தீவிரமடையும் போது நிலாவின் சகோதரியான நந்தினி ( ஐஸ்வர்யா ராஜேஷ்) தனது சொந்த மற்றும் கடந்த காலத்துடனும் , அவரது குடும்பத்தினர் பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த வேதனையான உண்மைகளுடனும் போராடுகிறார்.

பாரம்பரியத்தில் மூழ்கிய ஒரு நகரம் :

இந்தத் தொடர் நகரத்தின் கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் இயக்கத்தை சிக்கலான முறையில் பின்னி பிணைக்கிறது. அங்கு பழங்கால மரபுகளும், நவீன யதார்த்தங்களும் எதிர்பாராத தருணத்தில் மோதுகின்றன.

கணிக்க முடியாத திருப்பங்கள் மற்றும் முடிச்சுகள் :

பல அதிர்ச்சியூட்டும் திருப்பங்களை கொண்டிருக்கிறது. பார்வையாளர்கள் நிலாவின் தலைவிதி மற்றும் உண்மையை கண்டறியும் பயணத்தைப் பற்றி யூகிக்க வைக்கிறது. இதனால் பொய்கள் மற்றும் மறைக்கப்பட்ட நோக்கங்களின் புதிய கோணங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன.

பரபரப்பான இறுதி கட்டம் :

தொடரின் இறுதி பகுதியை நெருங்கும் போது.. நிலா காணாமல் போனதன் பின்னணியில் உள்ள உண்மை வெளிப்படுகிறது. யாரும் எதிர்பாராத வஞ்சகம் மற்றும் துரோகம் நிறைந்த புதிரையும் வெளிப்படுத்துகிறது.

வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரான இந்த இணைய தொடர், புஷ்கர் மற்றும் காயத்ரி இணைந்து எழுதி, உருவாக்கி, இயக்குநர்கள் பிரம்மா மற்றும் கே எம் சர்ஜுன் ஆகியோர் இயக்கத்தில் தயாரான இந்த தொடரில் கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் லால், சரவணன், கௌரி கிஷன்( முத்து) சம்யுக்தா விஸ்வநாதன் ( நாச்சி) மோனிஷா பிளெஸ்சி ( முப்பி), ரினி ( காந்தாரி ), ஸ்ரீஷா (வீரா) அபிராமி போஸ் ( செண்பகம்) நிகிலா சங்கர் (சந்தானம்), கலைவாணி பாஸ்கர் ( உலகு ), அஸ்வினி நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகை மஞ்சிமா மோகன் மற்றும் கயல் சந்திரன் ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளனர்.
‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ சீசன் 2 பிரைம் வீடியோவில் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிப்ரவரி 28 தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஆங்கில வசனங்களுடன் பிரத்யேகமாக திரையிடப்படுகிறது.

YouTube player

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.