‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியின் நடிப்பில் தயாராகி வரும் சோசியோஃபேண்டஸி என்டர்டெய்னர் திரைப்படமான ‘ விஸ்வம்பரா ‘ ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. குறிப்பாக இப்படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இப்படத்திற்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் வசீகரிக்கும் உலகத்தை பற்றிய ஒரு பார்வையை இந்த டீசர் அளித்தது. இயக்குநர் வசிஷ்டா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை யு வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் விக்ரம், வம்சி – பிரமோத் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகி வருகிறது.
தயாரிப்பு பணிகள் நிறைவடையும் தருவாயில் சிரஞ்சீவியின் அறிமுக பாடலை படக் குழுவினர் ஹைதராபாத்தில் உள்ள ஷங்கர் பள்ளியில் ஆடம்பரமான அரங்கம் அமைத்து, அதில் படப்பிடிப்பினை நடத்தி வருகிறார்கள். இந்த பாடலுக்கான தயாரிப்பு வடிவமைப்பாளராக ஏ எஸ் பிரகாஷ் மேற்பார்வையில் கலை நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த பாடலுக்காக இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி ஆற்றல் வாய்ந்த மாஸான பாடலுக்கு இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் ராம ஜோகய்ய சாஸ்திரி பாடல் எழுத, பிரபல நடன இயக்குநர் ஷோபி மாஸ்டர் நடன அசைவுகளை அமைத்திருக்கிறார்.
பாடலுக்கான படப்பிடிப்பு நடந்த தளத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி காரில் இருந்து இறங்கி, கூர்மையான பார்வையுடன் கூலாகவும் , ஸ்டைலாகவும் இருப்பதை
காட்சிப்படுத்துகிறது.
‘ பிம்பிசாரா ‘ எனும் பிளாக் பஸ்டர் ஹிட் மூலம் அறிமுகமான இயக்குநர் வசிஷ்டா அவருடைய மதிப்புமிக்க படமாக கருதும் ‘விஸ்வம்பரா’விற்காக தனது இதயபூர்வமான உழைப்பை வழங்கி வருகிறார். மேலும் அவர் தனது விருப்பத்திற்குரிய நட்சத்திரமான சிரஞ்சீவியுடன் இணைந்து ஒரு அற்புதமான உலகத்தை உருவாக்கியுள்ளார். இதில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் வண்ணமயமாகவும், அற்புதமாகவும் இருக்கும். மேலும் உயர்தரமிக்க VFX , ஹை ஆக்டேன் அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் உணர்வுபூர்வமான நாடகத்தையும் கொண்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தில் திரிஷா கிருஷ்ணன், ஆஷிகா ரங்கநாத், குணால் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சோட்டா கே. நாயுடு ஒலிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதை வென்ற எம். எம். கீரவாணி இசையமைக்கிறார்.
நடிகர்கள் :
‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி, திரிஷா கிருஷ்ணன், ஆஷிகா ரங்கநாத், குணால் கபூர்.
தொழில்நுட்ப குழு :
எழுத்து & இயக்கம் : வசிஷ்டா
தயாரிப்பாளர்கள் : விக்ரம், வம்சி – பிரமோத்
தயாரிப்பு நிறுவனம் : யுவி கிரியேஷன்ஸ்
இசை : எம். எம். கீரவாணி
ஒளிப்பதிவு ; சோட்டா கே. நாயுடு
தயாரிப்பு வடிவமைப்பு : ஏ. எஸ் பிரகாஷ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ