மலையாளத்தில் திரைக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களைக் கடந்த நிலையில் தற்போது அம்… ஆ.. என்ற திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.. சென்சாரில் U சான்றிதழ் பெற்றுள்ளது..
ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. தேவதர்ஷினி கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்..
கதை….
கேரளாவில் ஒரு மலைப்பகுதி உச்சியில் யாருமே இல்லாத பகுதியில் தன் பேத்தியுடன் தனியாக வசித்து வருகிறார் தேவதர்ஷினி.. அந்த மலைப் பகுதியில் ரோடு போட காண்ட்ராக்ட் கிடைத்திருப்பதாக சொல்லி திலீப் போத்தன் வருகிறார்.. ஊர் மக்களுடன் சகஜமாக பழகிக் கொண்டிருக்கும்போது இவர் நிஜமான ரோடு காண்ட்ராக்டர் அல்ல என உண்மை அறிந்த ஒரு முதியவர் இவரை தாக்குகிறார்.
அதன் பிறகு தான் இவர் யார் விவரம் தெரிய வருகிறது.. இவர் தேவதர்ஷினியை தேடி வந்ததாகவும் கூறுகிறார்.. அப்படி என்றால் தேவதர்ஷினி யார்? அவருடன் இருக்கும் குழந்தை யார்? இவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு? என்பதெல்லாம் மீதிக்கதை..
கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…
நடிகர்கள் : தேவதர்ஷினி, திலீப் போத்தன், மீரா வாசுதேவ், ஜாஃபர் இடுக்கி, டி.ஜி. ரவி மற்றும் பலர்
எதார்த்த மனிதராக வரும் திலீப்.. திடீரென அதிரடி காட்டுவதும் அதன் பின் போலீசாக விசாரிப்பதும் எனது ரசிக்க வைக்கிறார்.. கிளைமாக்ஸ் காட்சியில் இவர் எடுக்க முடிவு மெய் சிலிர்க்க வைக்கும்..
தமிழில் பல படங்களில் அம்மா அக்கா அண்ணி ஆன்ட்டி என்று குணச்சித்திர கேரக்டரிலும் காஞ்சனா படத்திலும் காமெடி வேடங்களில் கலக்கியிருப்பார் தேவதர்ஷினி.. ஆனால் இதில் முழுக்க முழுக்க மலையாள வண் வாசனையுடன் மணக்கும் படியான நடிப்பை கொடுத்திருக்கிறார் தேவதர்ஷினி.
முக்கியமாக குழந்தைக்கு குயிலி என்ற பெயரிடும் அந்தக் காட்சியும் குழந்தையை தாங்கிக் கொண்டு மலை மீது ஏறி காட்சிகளில் அம்மா கேரக்டரை உணர்வு பூர்வமாக செய்திருக்கிறார்..
வாடகை தாய் என்ற கருத்தை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் செபஸ்டின்.. வாடகத்தாய் சட்டப்படி குற்றம் அல்ல.. ஆனால் வாடகை தாய்க்கு பணம் கொடுப்பது சட்டப்படி குற்றம் என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தியிருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் தம்பதிகள் குழந்தை ஊனமாகப் பிறந்தால் வேண்டாம் என்பதும் அதனால் வாடகை தாய் படும் அவஸ்தைகளையும் அழகாக உணர்வு பூர்வமாக நம் மனதை கலங்கடிக்கும் விதமாக படமாக்கி இருக்கிறார்.
தயாரிப்பு: காப்பி புரொடக்ஷன்ஸ்
எழுத்து: கவிபிரசாத் கோபிநாத்
இயக்கம்: செபாஸ்டின் தோமஸ்
கேரள மாநிலத்திற்கு உரித்தான பசுமை நிறைந்த காட்சிகளை படமாக்கி இருக்கின்றார் ஒளிப்பதிவாளர்.. அதுபோல பாடலும் பின்னணியை இசையும் நம் மனதை விட்டு நீங்க மறுக்கிறது..
ஆக இந்த அம்.. ஆ.. வாடகை தாயின் சொந்தத் தாய்மை.
