M/s. வெர்டிகிள் லா சினிமாஸ் & ட்ரீ புரொடக்‌ஷன் தயாரிப்பில், குழந்தை வேலப்பன் இயக்கத்தில் குழந்தை வேலப்பன், நர்மதா பாலு மற்றும் கவிதாபாரதி நடிப்பில் உருவாகி இருக்கும் ஷார்ட் வெர்டிகிள் வெப்சீரிஸ் ‘யுகம்’. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

வசனகர்த்தா ராஜேஷ் கண்ணா, “இந்தக்கதை ஒரு புதிய முயற்சி. உண்மையான குடும்பப்படம் இதுதான். புது உலகத்தை இந்தக்கதை காட்டும். உங்கள் ஆதரவு தேவை”.

எடிட்டர் சாபு, “சினிமாவில் நான் எடிட்டர் ஆவேன் என்று நம்பிய முதல் மனிதர் குழந்தை வேலப்பன் தான். அந்தளவுக்கு எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கு. வெர்டிகிளாக படம் செய்யவதற்கான ஸ்கிரிப்ட் இது. பல சவால்களைக் கடந்துதான் படமாக்கி இருக்கிறோம். குழந்தை வேலப்பன் வெற்றி பெற வாழ்த்துக்கள்!”.

இசையமைப்பாளர் ஜோவன், “குழந்தை வேலப்பன் வேலை செய்வதற்கு எளிதான இயக்குநர். வெர்டிகிள் சினிமா எனும்போது திரையில் முழுதும் வராதோ என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால், அந்த எண்ணம் வராத அளவுக்கு கதை உங்களை கட்டிப்போடும்”.

இசையமைப்பாளர் மெல்வின், “எங்க எல்லாருடைய சேர்ந்த உழைப்பு தான் இந்த யுகம், சீரிஸ் டீம் வொர்க்தான். குழந்தை வேலப்பன் தெளிவான இயக்குநர். கதை வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

இயக்குநர் குழந்தை வேலப்பன் மனைவி, நடிகை நர்மதா, “அவருடன் பல வருடங்களாக பயணித்து வருகிறேன். அவருடைய தோல்விகளைப் பார்த்திருக்கிறேன். இருவரும் சேர்ந்து வெற்றி கொடுக்கலாம் என்று உருவாக்கிய கதைதான் இது. என்னை விட அவரது நண்பர்கள் தான் அவருக்கு நிறைய சப்போர்ட் செய்திருக்கிறார்கள். நீங்களும் கதைக்கு சப்போர்ட் செய்யுங்க”.

நடிகர் குரு சோமசுந்தரம், “இந்த கதையை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் பார்க்க ஆரம்பித்தேன். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இரண்டு நடிகர்கள் ஒரே லொகேஷன் வைத்து படம் எடுப்பது கடினமான விஷயம். இந்தக் கதையை வெர்டிகிளாக புது முயற்சியாக கொடுத்துள்ளனர். கலையில் வெற்றி, தோல்வி என்பதே கிடையாது. அதில் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். இப்பொழுது படம் எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதை பார்ப்பதற்கான களமும் அதிகமாகியுள்ளது. அதனால் வெற்றியை மட்டுமே நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என்பதில்லை” என்றார்.

மில்லினியம் மூவிஸ் டத்தோ சிவம், ” இந்த புது முயற்சிக்கு ஊக்குவித்த தயாரிப்பாளருக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த கதை நிச்சயம் வெற்றி பெறும்”.

ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், ” வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் வைடாக பார்ப்பவன் நான். ஆனால், இந்த கதையை ஒரு வீட்டின் ஜன்னலில் இருந்து பார்ப்பது போல வெர்ட்டிகிளாக இருந்தது. சினிமாவில் நிறைய புது விஷயங்களை செய்யலாம் என்பதற்கான சான்று தான் இந்த கதை. குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்”.

நடிகர் ஹரிகிருஷ்ணன், ” குழந்தை வேலப்பன் சாருடன் பணிபுரிய வேண்டுமென கேட்டுக் கொண்டே இருப்பேன். ஒருநாள் அவர் இந்த கதையை வெர்டிக்கலாக எடுத்து இருக்கிறேன் என்று என்னை கூப்பிட்டு காண்பித்தார். மிகவும் ஆச்சரியமாக இருந்தது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

இயக்குநர் நளன் குமாரசாமி, ” வெர்டிகிள் சினிமா என்பதை கேட்கும் பொழுது புதுமையானதாக இருந்தது. இதுவரை நாம் வைத்த கோணங்கள் இல்லாவற்றையும் மாற்றி எடுக்க வேண்டும் என்பதே சவாலான ஒரு விஷயம்தான். இப்போது எல்லோருமே மொபைல் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதனால், சினிமாவில் இது ஒரு புது தொடக்கம் என்றுதான் சொல்ல வேண்டும். வருங்காலத்தில் இது போன்ற வெர்டிகிள் கதைகள் அதிகம் எடுக்கப்படலாம். ‘யுகம்’ குழுவினருக்கு வாழ்த்துக்கள் “.

இயக்குநர், நடிகர் குழந்தை வேலப்பன், ” இனிவரும் காலத்தில் தலைமுறையினருக்கு மொபைலை திருப்புவதற்கு கூட சோம்பேறித்தனமாக இருக்கும் அந்த சோம்பேறித்தனத்தை எப்படி காசாக்கலாம் என்பதற்கான கான்செப்ட் தான் இந்த வெட்டிகள் ஐடியா, என்று சமீபத்தில் நான் கலந்து கொண்ட கான்ஸ் திரைபட விழாவில் வெர்டிகள் சினிமா வருங்காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என ஒரு கலந்துரையாடல் நடந்தது, அதில் கலந்து கொண்டது தான் இந்த வெப் சீரிஸ் எடுக்க காரணமாக அமைந்தது. எந்த பார்மேட்யாக இருந்தாலும் கதை சொல்லும் விதம் தான் அதை ரசிப்பு தன்மைகுள் கொண்டு செல்லும், ஆரம்பத்தில் இந்த கதையை நான் சொல்லும் பொழுது பலருக்கும் புரியவில்லை. ஆனால் அதை எழுதிக் கொண்டு போய் கொடுத்த பொழுது புரிந்து கொண்டு உற்சாகப்படுத்தினார்கள்.படம் எடுக்கும் சில சவால்கள் காத்திருந்தது, அதை புரிந்துகொண்டு அதற்காக கேமராமேன் சரவணன்ராமசாம சில மாற்று முறைகள் கையாண்டு சிலவற்றை கற்றுக்கொண்டே மொத்த குழுவும் சேர்ந்து உழைத்து படம் எடுத்து முடித்தோம். உலகம் முழுவதும் வெர்டிகள் சினிமாவுகாக நடக்கும் திரைப்பட விழாவிற்கும் அனுப்பி வைத்தோம். அதில், டொரொண்டோ மற்றும் இத்தாலியில் சிறந்த வெர்டிகள் படம் மற்றும் இந்தப் படத்தில் நடித்ததற்காக என் மனைவிக்கு சிறந்த நடிகைகான விருதும் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. அதன் தொடர்ச்சியாக வெர்டிகள் லா சினிமாஸ் என்ற youtube சேனல் ஆரம்பித்து ‘யுகம்’ வெப் சீரிஸ்யாக வெளியிட்டுள்ளோம், அதில் தமிழ், தெலுங்கு,ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் பார்க்கலாம், நிச்சியம் பார்வையாளர்களின் ரசிப்பு தன்மையை அடுத்த கட்டத்துக்கும் மாற்றும் என்ற நம்பிக்கையுள்ளது. உங்கள் அனைவரின் ஆதர்வும் நிச்சயம் தேவை” என்றார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.