நூறு கோடி… இருநூறு கோடி… ஐநூறு கோடி ரூபாய் என தொடர்ந்து இந்திய அளவிலான வசூல் கிளப்பில் இணைந்த படங்களை தயாரித்து, வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் முதன் முறையாக பான் வேர்ல்ட் திரைப்படமாக இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் #AA22xA6 படத்தில், அல்லு அர்ஜுன் அதிரடி ஆக்சன் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் தடம் பதித்து தனித்துவமான நட்சத்திர நடிகையாக ஜொலிக்கும் தீபிகா படுகோன் இணைந்திருக்கிறார். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பிரபலமான நடிகை தீபிகா படுகோன் இணைந்திருக்கிறார் எனும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருப்பதுடன், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது.
இந்தப் படத்தில் ஏற்கனவே சர்வதேச தரத்திலான VFX தொழில்நுட்பக் குழுவினர் இணைந்து தங்களுடைய முழுமையான பங்களிப்பை வழங்கத் தொடங்கி இருக்கிறார்கள். இந்தத் தருணத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகையான தீபிகா படுகோனும் இணைந்திருக்கிறார். படத்தை பற்றிய அப்டேட்டுகள் இனி தொடர்ந்து வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.
