‘காந்தாரா : சாப்டர் 1’ படத்தின் மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. இது மூன்று வருடங்களாக எடுக்கப்பட்ட காந்தாரா சினிமா பயணத்தின் உருவாக்கத்தை காட்டுகிறது.

‘ ராஜ குமாரா’ , ‘கே ஜி எஃப்’, ‘சலார் ‘ மற்றும் ‘ காந்தாரா’ போன்ற படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ், நேற்று ‘காந்தாரா :சாப்டர் 1 ‘ படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.‌

படப்பிடிப்பு நிறைவடைந்ததைக்கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், 250 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பின் முயற்சிகளை சுவாராசியமான நிகழ்வுகளை விவரிக்கிறது. ஆயிரக்கணக்கான கலைஞர்கள் இப்படத்தின் தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் அயராது உழைத்துள்ளனர்.. இந்த மேக்கிங் வீடியோ – நடிகர் மற்றும் இயக்குநரான ரிஷப் ஷெட்டியின் கதை சொல்லலை விளக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

‘ காந்தாரா : சாப்டர் 1 ‘ ன்  இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத் , ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ். காஷ்யப் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் தினேஷ் வங்காளன் ஆகியோர்.‌

அக்டோபர் இரண்டாம் தேதியன்று உலக அளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம் , இந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

YouTube player

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.