அண்மைக்காலமாக திரையுலகப் பிரபலங்கள் பலரின் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் இவரது சமையல்தான். பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் இவரது சமையல் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ எனும் நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்று வருகிறார்.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு, ஸ்ருதி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திரைப்படங்களில் உடைவடிவமைப்பாளராகப் பணியாற்றி வரும் ஜாய் கிரிசில்டா, தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் திருமணம் ஆகிவிட்டதாக சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக, மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வந்த ஜாய் கிரிசில்டா இப்போது திருமணம் நடந்துவிட்டதாகவும் கர்ப்பமாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
இந்த ஜாய் கிரிசில்டாவுக்கு 2018 ஆம் ஆண்டு ’பொன்மகள் வந்தாள்’ பட இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் உடன் திருமணம் நடைபெற்று பின்னர் விவாகரத்து ஆனது.
இப்போது திடீரென மாதம்பட்டி ரங்கராஜுடன் திருமணம் ஆகிவிட்டதென்றும் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்திருப்பதன் பின்னணியில் பெரும் சர்ச்சைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.திரையுல்கில் உலா வரும் இதுகுறித்த தகவல்கள் அதிர்ச்சியூட்டுபவையாக உள்ளன.இதனுடைய உண்மைத்தன்மை சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும் என்றாலும் பேசப்படும் விசயம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.
மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருந்த மாதம்பட்டி ரங்கராஜும்,கணவரை விவாகரத்து செய்த ஜாய் கிரிசில்டாவும் பொதுவிருந்துகளில் சந்தித்துக் கொண்டபோது அவர்களுக்குள் ஓர் ஈடுபாடு ஏற்பட்டிருக்கிறது.
இருவரும் இணைந்து வாழ்வது என்கிற முடிவை எடுத்திருக்கின்றனர்.அதன் விளைவாக ஜாய்கிரிசில்டா கர்ப்பம் தரித்திருக்கிறார்.
எனவே,தாங்கள் திருமணம் செய்துகொண்டோம் என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று மாதம்பட்டி ரங்கராஜிடம் கேட்டிருக்கிறார் ஜாய் கிரிசில்டா.
ஆனால் மாதம்பட்டி ரங்கராஜுக்கு அதில் விருப்பமில்லையாம்.சினிமா உலகில் இவ்வாறு சேர்ந்திருப்பது சகஜம்தானே இதற்காகத் திருமணம் செய்துகொள்ள முடியுமா? என்பது அவருடைய கேள்வி.
இதை நேரடியாக ஜாய்கிரிசில்டாவிடம் சொல்லமுடியாதே? அதனால், எனக்கும் என் மனைவிக்கும் முறைப்படி விவாகரத்து நடக்கவில்லை.அதனால் இப்போது நாம் கல்யாணம் செய்து கொண்டோம் என்று அறிவித்தால் சட்ட ரீதியாகச் சிக்கல் வரும் என்று சொல்லி திருமண அறிவிப்பைத் தவிர்த்து வந்திருக்கிறார்.
அதோடு,கொஞ்சம் கொஞ்சமாக ஜாய் கிரிசில்டாவை விட்டு விலகவும் தொடங்கிவிட்டாராம்.இதைச் சற்றும் எதிர்பாராத ஜாய்கிரிசில்டா, அவரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.அதனால் அவருக்குத் தெரிந்தவர்களிடம் விசாரித்திருக்கிறார். அப்போது, அவனுக்கு இதுதான் வேலையே? ஒரு பெண்ணுடன் சில காலம் பழகுவான்,பிறகு,அந்தப்பெண்ணை விட்டுவிட்டு வேறு பெண்ணைத் தேடிப்போய்விடுவான் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இதனால் அதிர்ச்சியான ஜாய்கிரிசில்டா,அவரை விட்டு விலக மனமில்லை என்பதாலும் அவரை நம்பி குழந்தையைச் சுமந்து கொண்டிருப்பதாலும் அதைத் தாமே பொதுவெளியில் சொல்லிவிடுவது என்று முடிவெடுத்துச் சொல்லிவிட்டார் என்று கூறப்படுகிறது.
இது முழு உண்மையாக இருக்கக்கூடாது.அப்படி இருந்தால், மாதம்பட்டி ரங்கராஜ் பெரும் குற்றவாளி என்பதில் மாற்றமில்லை.
– இளவரசன்