உச்சி வெயிலில் உடல் வியர்க்க நா உலர நடந்து போகும் போது வழியில் நிற்கும் ஒரு வேப்ப மர நிழலில் இளைப்பாற ஒதுங்குகையில் சில்லென ஒரு காற்று உடல் தழுவிப் போனால் என்ன உணர்வு வருமே அந்த சுகமான இதமான உணர்வுதான் இயக்குனர் ராமின் பறந்து போ. இதை திரைப்படம் என்று வரையறைக்குள் அடக்கி விட முடியாது.

இது குழந்தைகளுக்கான படமா ? இல்லை பெற்றோர்களுக்கான படமா ? இல்லை இது சமூகத்துக்கான செய்தியைச் சொல்லும் படமா? என்ற எல்லாக் கேள்விகளுக்கும் ஒற்றை வார்த்தை பதில் ஆம். வாழும் வாழ்க்கையின் அவஸ்தையை சிரித்தபடி கடக்கும் படம். வாழ்க்கையை வாழ்வதெப்படி என்பதை குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்ளச் சொல்லும் இந்த ஆண்டின் மிகச் சிறந்த படம் பறந்து போ.தியேட்டரில் பார்த்து வாய் விட்டு மனம் விட்டு சிரித்து “பறந்துபோ”கலாம் பரந்து விரிந்து கிடக்கும் அன்பெனும் பரந்த வானத்தில்.

— கணேசா சுப்ரமணியன்.

 

ராம் இயக்கிய பறந்து போ. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அழகான கவிதை. நீங்கள் அதை வாசிக்க வேண்டும். அதன் நடையை, அழகியலை, கருவை ரசிக்க வேண்டும்

பொதுவாக ராம் படங்களில் ஒருவித கோபம், சோகம், விரக்தி இருக்கும். கற்றது தமிழ், தங்கமீன் கள், தரமணி, பேரன்பு படங்களை அழுது கொண்டே பார்த்து இருப்போம்.

பறந்து போ முற்றிலும் வேறு அனுபவம். அவ்வளவு சிரிப்பு, சிவா, கிரேஸ் ஆண்டனி, சிறுவன் மிதுல்ராயன், அஞ்சலி, அஜூவர்கீஸ் சிரிக்க வைக்கிறார்கள். மகிழ்ச்சி படுத்துகிறார்கள். சிரித்து கொண்டே, கை தட்டி ஏகப்பட்ட சீன் களை அனுபவிக்கலாம்

குடும்பம், குழந்தைகள், பரபரப்பான வாழ்க்கை, ஓட்டம் என பல விஷயங்களையும் பேசுகிறது
ஏகாம்பரம் ஒளிப்பதிவு, மதன் கார்க்கி வரிகள், சந்தோஷ் தயாநிதி இசை படத்துக்கு பலம்.

பக்கா கலகல, காமெடி கலந்த கமர்சியல் கதை. குடும்பம், குழ்ந்தைகளுடன் பார்த்தால் அந்த நாள் மறக்க முடியாத நாளாக இருக்கும். வாழ்நாள் முழுக்க படம், சீன் கள் குறித்த நினைவு இருக்கும்.

#பறந்துபோ #ParanthuPo

— மீனாட்சி சுந்தரம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.