‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நாளை தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவர் நடிக்கும் ‘விஸ்வம்பரா ‘ படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் ஸ்டில்லை வெளியிட்டுள்ளனர். இயக்குநர் வசிஷ்டா (Vassishta) இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை யுவி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் விக்ரம், வம்சி – பிரமோத் ( Pramod ) ஆகியோர் பிரம்மாண்டமான முறையில் தயாரித்திருக்கிறார்கள்.

விஸ்வம்பராவின் உலகில் நடந்த கொந்தளிப்பான நிகழ்வுகளை பிரதிபலிக்கும் ஒரு குழந்தைக்கும், ஒரு முதியவருக்கும் இடையேயான வசீகரிக்கும் உரையாடலுடன் இந்த காணொளி தொடங்குகிறது. ஒரு மனிதனின் சுயநலத்தால் தூண்டப்பட்ட மிகப்பெரிய அழிவை முதியவர் விவரிக்கிறார். கதை ஒரு புராணக் கதையை பற்றியதாக இருக்கிறது. அதில் சிரஞ்சீவி விஸ்வம்பராவின் பாதுகாவலராக தோன்றுகிறார்.
ஒளிப்பதிவாளர் சோட்டா கே. நாயுடு (Chota K Naidu)- விஸ்வம்பராவின் மாய உலகத்தை வளமான …கம்பீரமான… காட்சி அமைப்புகளுடன் உயிர்ப்பிக்கிறார். எம். எம். கீரவாணி ( MM Keeravani’s) இசையை அமைத்துள்ளார். VFX – ஹாலிவுட் தரத்திற்கு நிகராக அமைந்திருக்கிறது.
இந்த திரைப்படத்தில் திரிஷா கிருஷ்ணன் கதாநாயகியாக நடிக்கிறார். இவருடன் ஆஷிகா ரங்கநாத் (Ashika Ranganath) மற்றும் குணால் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஏற்கனவே அறிவித்தபடி விஸ்வம்பரா 2026 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும். இது இந்த சீசனின் மிகப்பெரிய ஈர்ப்பாகவும் இருக்கும்.
நடிகர்கள் :
எழுத்து & இயக்கம் : வசிஷ்டா
தயாரிப்பாளர்கள் : விக்ரம், வம்சி – பிரமோத்
தயாரிப்பு நிறுவனம்: யு வி கிரியேசன்ஸ்
இசை : எம். எம். கீரவாணி , பீம்ஸ் சிசிரோலியோ
ஒளிப்பதிவு : சோட்டா கே. நாயுடு
தயாரிப்பு வடிவமைப்பாளர் : ஏ. எஸ். பிரகாஷ்
