படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸே ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முன்னதாக வெளியான “வைப்” பாடல் இசை ரசிகர்களிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது. இப்போது இறுதியாக டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கார்த்திக் கட்டமனேனி (Karthik Ghattamaneni) கதாசிரியர், ஒளிப்பதிவாளர், இயக்குநர் என ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளை ஒருங்கே செய்துள்ளார். மணிபாபு கரணம் எழுதிய பளிச்செனும் வசனங்கள் படத்தை மேலும் வலுப்படுத்துகின்றன. தேஜா சஜ்ஜாவின் நடிப்பு அற்புதம். ஒரு சாதாரண இளைஞனிலிருந்து உலகின் பாரத்தைச் சுமக்கும் ஒரு சூப்பர் யோத்தாவாக மாறும் அவரது பரிமாற்றம் வெகு அழகாக வெளிப்பட்டுள்ளது. அதிரடி காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் அர்ப்பணிப்பு, பயிற்சி மற்றும் உடல் மாற்றம் தெளிவாகத் தெரிகிறது.
ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு, பிளாக் ஸ்வோர்டு என்ற அழிவு சக்தியாக அச்சமூட்டுகிறார். ரித்திகா நாயக் வழிகாட்டும் ஆன்மீக சக்தியாக முக்கியப் பங்காற்றுகிறார். ஜகபதி பாபு சாது கதாபாத்திரத்தில் சிறப்பாகவும், ஷ்ரேயா சரண் தாயாக மனதை உருக்கும் வகையிலும், ஜெயராமின் புதிரான தோற்றமும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.
பிரம்மாண்டம், உணர்வுப்பூர்வமான அம்சங்கள், புராணம் – மூன்றையும் ஒருங்கிணைக்கும் “மிராய்” செப்டம்பர் 12 முதல் திரையரங்குகளில் பிரம்மாண்ட அனுபவத்தை வழங்கத் தயாராக உள்ளது.
தொழில்நுட்பக் குழு:
இயக்குநர்: கார்த்திக் கட்டமனேனி
தயாரிப்பாளர்கள்: டி.ஜி. விஸ்வா பிரசாத், கீர்த்தி பிரசாத்
தயாரிப்பு நிறுவனம்: பீப்பிள் மீடியா பேக்டரி
நிர்வாக தயாரிப்பாளர்: சுஜித் குமார் கொல்லி
இசை: கௌரா ஹரி
கலை இயக்குநர்: ஸ்ரீ நாகேந்திர தங்காளா
எழுத்து: மணிபாபு கரணம்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங்: ஹேஷ்டேக் மீடியா

