வண்ணாரபேட்டை பிரபல 5 ரூபாய் மருத்துவர் டாக்டர் S ஜெயச்சந்திரன் அவர்களின் துணைவியார் பிரபல மகப்பேறு மருத்துவர் C வேணி அவர்கள் இயற்கை எய்தினார்.

சென்னை வண்ணாரபேட்டையில் ஏழை மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில், மருத்துவம் பார்த்து பிரபலமான டாக்டர் S ஜெயச்சந்திரன் அவர்களின் மனைவி மற்றும் பிரபல மகேப்பேறு மருத்துவர் திருமதி C வேணி அவர்கள், இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

திருமதி C வேணி 1953 ஆம் வருடம் சின்னக்கண்ணு, புண்ணியகோடி தமபதியருக்கு கடைசி மகளாக பிறந்தார். சென்னையின் பிரபல KMC கல்லூரியில் மருத்துவ படிப்பை Gynaecology பிரிவில் முடித்தார். பின்னர் மருத்துவ கல்லூரி துறையில் தலைவராக ( HOD ) RSRM மற்றும் வேலூர் மருத்துவ கல்லூரிகளில் 40 வருடங்கள் பணியாற்றினார்.
மேலும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளராக பணியாற்றினார். தமிழ்நாடு எம் ஜி ஆர் மருத்துவகல்லூரியில் Controller of
Examinations ஆக பணியாற்றியவர், மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிருக்கான மருத்துவத்தில் புகழ் பெற்ற நிபுணராக திகழ்ந்தார்.

தனது கணவர் டாக்டர் S ஜெயச்சந்திரன் அவர்களைப் போலவே, வண்ணாரபேட்டை, காசிமேடு பகுதிகளில் பெண்களுக்கு மகப்பேறு மருத்துவ பணிகள் செய்து பிரபலமடைந்தார். இதுவரையிலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு மகப்பேறு பணிகள் செய்துள்ளார்.

மக்களுக்கு 5 ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் செய்து, இந்தியப்பிரதமர் மாண்மிகு திரு மோடி அவர்களாலும், தமிழக முதல்வர் மாண்புமிகு திரு மு க ஸ்டாலின் அவர்களாலும் பாராட்டப்பெற்ற திரு டாக்டர் S ஜெயச்சந்திரன் அவர்களின் மறைவைத் தொடர்ந்து, அவர் விட்டுச் சென்ற சமூக பணிகள், அவர் வாழ்ந்த இடத்தில் அவரது குடும்பத்தார் மூலம், தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

டாக்டர் திருமதி வேணி ஜெயச்சந்திரன் அவர்கள் 18.08.2025 காலை 6.15 மணி அளவில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வெங்கடாச்சலம் தெரு, பழைய வண்ணாரபேட்டை, சென்னை 21 என்ற முகவரியில் வைக்கப்பட்டுள்ளது.

19/08/2025  அன்று அவர்களின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காசிமேடு இடுகாட்டில் அடக்கம் செய்யப்படுகிறது.

தொடர்புக்கு
டாக்டர் சரத் ராஜ ஜெயச்சந்திரன்
+91 98848 66007

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.