காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக்பஸ்டர் மேக்கர் போயாபட்டி ஸ்ரீனு நான்காவது முறையாக  இணையும், அதிரடித் திரைப்படமான “அகண்டா 2: தாண்டவம்”, தற்போது  இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார்.  இந்தப் படத்தின் டீசர், பெரும் வரவேற்பை பெற்று, ரசிகர்களிடையே உச்சகட்ட எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ளது.

இப்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக – அகண்டா 2: தாண்டவம் உலகமெங்கும் வரும் டிசம்பர் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியான போஸ்டரில் பாலகிருஷ்ணா – நீண்ட முடி, கரடுமுரடான தாடி, புனித மாலைகள் மற்றும் நகைகள் அணிந்து, பாரம்பரிய காவி மற்றும் பழுப்பு நிற ஆடையில், அலங்கரிக்கப்பட்ட திரிசூலத்தை தாங்கியவாறு, பனிமூட்டம் சூழ்ந்த பின்னணியில் வீரமான பாவனையுடன் காட்சியளிக்கிறார். ஆன்மிகமும் அதிரடியும் கலந்த அவரது தோற்றம் ரசிகர்களை மயக்குகிறது.

எஸ். தமனின் (S Thaman) அதிரடி பின்னணி இசை, படத்தின் அதிரடி மாஸ் காட்சிகளை பல மடங்கு உயர்த்தி, ரசிகர்கள் எதிர்பார்க்கும பிரம்மாண்ட அனுபவத்தை வழங்கப்போகிறது. ஆன்மீக ஆற்றலுடன் கூடிய பாலகிருஷ்ணாவின்  தோற்றம், அவரது தீவிர ரசிகர்கள், மற்றும் திரை ஆர்வலர்களை ஏற்கனவே மெய்மறக்கச் செய்துள்ளது.

புதிய வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டதால், படக்குழுவுக்கு வலுவான ப்ரமோஷன் பணிகளை முன்னெடுக்க போதுமான நேரம் கிடைத்துள்ளது. தொடர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் அப்டேட்களும் சஸ்பென்ஸ்களும் அடுத்தடுத்து  வெளியாகவிருக்கின்றன.

படத்தில் சம்யுக்தா நாயகியாக நடிக்க, ஆதி பினிசெட்டி வலிமையான எதிர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், ஹர்ஷாலி மால்ஹோத்ரா முக்கியமான வேடத்தில் தோன்றுகிறார்.

ஒளிப்பதிவு பணிகளை – C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே செய்துள்ளனர். எடிட்டிங் பணிகளை தம்மிராஜு (Tammiraju) மற்றும் கலை இயக்கத்தை A. S. பிரகாஷ் செய்துள்ளனர்.

வலுவான படக்குழு மற்றும் வானளாவிய எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் “அகண்டா 2: தாண்டவம்”, ரசிகர்கள் கொண்டாடும் ஆன்மிக அதிரடி மாஸ் அனுபவமாக இருக்கும்

நடிப்பு :

நந்தமூரி பாலகிருஷ்ணா
சம்யுக்தா
ஆதிப் பினிசெட்டி
ஹர்ஷாலி மால்ஹோத்ரா

தொழில்நுட்பக் குழு :

எழுத்து, இயக்கம் : போயபதி ஸ்ரீனு
தயாரிப்பாளர்கள் : ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா
பேனர் : 14 ரீல்ஸ் ப்ளஸ்
வழங்குபவர் : M. தேஜஸ்வினி நந்தமூரி
இசை : S. தமன்
ஒளிப்பதிவு : C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : கோடி பருசூரி
கலை : A.S. பிரகாஷ்
எடிட்டிங் : தம்மிராஜு
சண்டை அமைப்பு : ராம் – லக்ஷ்மன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.