99/66 “தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு” படத்திற்காக புத்த மடாலயங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்ற படப்பிடிப்பு !

99 அடுக்குமாடி குடியிருப்புகளில் நடக்கும் ஹாரர் படம் ” 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு ”

மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில்
எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படத்திற்கு
” 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு ”
என்று வித்தியாசமாகப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் சபரி,
ரோகித் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.
கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன், ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான எம்.எஸ்.மூர்த்தி நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு சேவிலோ ராஜா
ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை மீனாட்சி சுந்தரம் கையாள, ஜெயமுருகன் கலை இயக்கத்தைச் செய்துள்ளார். நடன இயக்குநர்களாக ஸ்ரீதர் -ஆனந்த் இருவரும் பணியாற்றியுள்ளனர்.
பயர் கார்த்திக் பரபரப்பான சண்டைக்காட்சிகளை உருவாக்கியுள்ளார்.
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்.
தயாரிப்பு நிறுவனம் – மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்.
கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்துத் தயாரித்து இயக்கியுள்ளார் எம்.எஸ். மூர்த்தி.

படம் பற்றித் தயாரிப்பாளரும் இயக்குநருமான எம்.எஸ். மூர்த்தி கூறும்போது,

“படத்தின் கதை சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதியில் நடைபெறுகிறது. அதனால் தான் இந்தப் படத்திற்கு
” 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு ”
என்று பெயர் வைத்துள்ளோம்.

அந்தக் குடியிருப்புப் பகுதியில் அவ்வப்போது நடைபெறும் சில அமானுஷ்ய சம்பவங்கள் அங்கிருக்கும் குடியிருப்பு வாசிகளைப் பயமுறுத்திப் பீதி கொள்ள வைக்கிறது.எதனால் அப்படி நடக்கிறது?அதன் பின்னணியில் இருப்பது என்ன? என்பதை சபரியும், ரக்சிதாவும், ஸ்வேதாவும், எம்.எஸ்.மூர்த்தியுடன் சேர்ந்து கண்டுபிடிக்க முயல்கிறார்கள்.அவர்களின் விரும்பியபடி மர்மங்களைக் கண்டுபிடித்து அந்தக் குடியிருப்பு வாசிகளைக் காப்பாற்றினார்களா? இல்லையா? இறுதியில் என்ன நடந்தது என்பதே இந்தப் படத்தின் திரைக்கதை.

இப்படத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்படாத புத்த பிக்குகளின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

அரசு அனுமதி பெற்று தாய்லாந்து, பர்மா, இலங்கை போன்ற பகுதிகளில் புத்த மடலாயத்தின் உள்ளேயே சென்று ஐநூறு புத்த பிக்குகளின் மத்தியில் பாடல்களையும் – சில காட்சிகளையும் பிரம்மாண்டமான முறையில் படமாக்கியுள்ளோம்.

மற்றும் படத்தில் AI-CG – காட்சிகள் நவீன தொழில் நுட்பத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக வடிமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது”

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.