மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் வாழ்க்கை வரலாறு ஓர் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்த் திரையுலகம் மற்றும் தமிழ்நாடு அரசியலுக்கு அவர் செய்த பெரும் பங்களிப்புகைளப் பதிவு செய்யும் ஆர்எம்வீ தி கிங் மேக்கர் (RMV The Kingmaker) எனும்ஆவணப்படம் விரைவில் வெளியாகிறது.

ஆரம்ப காலத்தில் தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோருடன் பணியாற்றிய அவர், பின்னர் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் ெநருங்கிய துணையாக இருந்தார்.

ஆர்.எம்.வீ அய்யாவின் சேவை, ஒழுக்கம்,தலைமைக் குணம் மற்றும் தமிழுக்கு அவர் செய்த அர்ப்பணிப்பு ஆகியன இந்தப்படத்தில் விரிவாகக் காட்டப்பட்டுள்ளது.
அரிய காட்சிகள், முக்கிய நபர்களின் பேட்டிகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களின் மூலம் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படம் சத்யா மூவிஸ் மற்றும் தி கோல்டன் கிங் ஸ்டுடியோஸ் ஆகியன இணைந்து தயாரித்துள்ளன.
ஆர்.எம்.வீரப்பன் சினிமா வளர்ச்சிக்கும், தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கும் ஆற்றிய பங்களிப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பேத இந்த தயாரிப்பு நிறுவனங்களின் நோக்கம்.

ஆர்.எம்.வீரப்பன் அய்யாவின் மகன் தங்கராஜ் வீரப்பன், தந்தையின் பாரம்பரியம், பண்புகள் மற்றும் சமூகப் பணிகைள மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டு இந்த ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளார்.

இது தந்தைக்கு அவர் செலுத்தும் மனமார்ந்த அஞ்சலி.
ஆவணப்பட இயக்குநர் பினு சுப்பிரமணியம், உண்மை மற்றும் வரலாற்றை எளிமையாகவும்ஆழமாகவும் பதிவு செய்யும வகையில் இந்தப் படத்தை வடிவைமத்துள்ளார்.
அவரின் ஆராய்ச்சி, கதை சொல்லும் திறன், மற்றும் காட்சிகளை நுணுக்கமாக உருவாக்கும் நடை ஆகியன இந்த ஆவணப்படத்தின் முக்கிய பலமாகும்.

ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக,இந்தக் குழு ஆர்எம்வீ பிறந்த கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுடன் நேரடியாக உரையாடி பல முக்கிய தகவல்களைச் சேகரித்துள்ளது.

மேலும் சினிமா, அரசியல், இலக்கியம், ஆன்மீகம், விஞ்ஞானிகள், மற்றும் வரலாற்றாளர்கள் உள்ளிட்ட பல துறைகளின் நிபுணர்களைச் சந்தித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த ஆவணப்படம் ஒரு வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல;
தமிழகத்தின் சினிமா மற்றும் அரசியல் வரலாற்றில் முக்கிய பங்காற்றிய ஆர்.எம்.வீ அய்யாவின் அரிய பயணத்தைப் பதிவு செய்யும வரலாற்று ஆவணப்படம்.
அவரின் தலைமைக குணம், நம்பிக்கை, திறமை மற்றும் தமிழ்ப்பண்பாட்டுக்கு அவர் செய்த பங்களிப்புக்கான ஒரு மரியாதை இது என்று படக்குழுவினர் சொல்கிறார்கள்.

இந்தப்படத்தில்….

1926 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி ஆர்.எம்.வீரப்பன் பிறக்கிறார். பெரியாரின் கொள்கைகளில் ஈர்ப்பு ஏற்பட்டு, குடியரசு இதழில் வேலை செய்து, பின் அண்ணாவோடு இணைந்து பணியாற்றி, அதன்பின் எம்.ஜி.ஆரோடு இணைந்து இறுதிவரை பயணித்து, அதன்பின்னர் ஜெயலலிதாவோடு இணைந்திருந்தார்.

அவரைப் பற்றிய நினைவுகள் மூலமாக பல அறிய தகவல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் சத்யராஜ் வரை பலர் ஆர்.எம்.வீரப்பன் பற்றிய மலைப்புச் செய்திகளையும் மதிப்புத் தகவல்களையும் பகிர்ந்துகொள்கின்றனர்

பத்திரிகையாளர் ரா.கண்ணன் பகிரும் தகவல்கள் மிக முக்கியமானவை மட்டுமின்றி உணர்ச்சிகரமானதும் கூட. 1969 தேர்தலில் தி.மு.க பெரும் வெற்றி பெறுகிறது. அந்த வெற்றிக்கு எம்.ஜி.ஆர் பெருங்காரணம்.

அறிஞர் அண்ணா மறைவுக்குப் பின் முதலமைச்சரான கலைஞர் எம்.ஜி.ஆருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை. கட்சியின் பொருளாளர் ஆக இருக்கும் எம்.ஜி.ஆர் கணக்கு வழக்கை கலைஞரிடம் கேட்கிறார். கலைஞர் எம்.ஜி.ஆரை உடனே கட்சியை விட்டு நீக்குகிறார். பதறிப்போகும் ஆர்.எம்.வீரப்பன் கலைஞரையும் எம்.ஜி.ஆரையும் இணைக்க கடுமையான முயற்சியை மேற்கொள்கிறார். முடியவில்லை. எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதாகச் சொல்கிறார். உடனே ஆர்.எம்.வீரப்பன் மின்னலாக வேலைகளைத் துரிதப்படுத்துகிறார். தனிக்கட்சி அறிவிப்பை எம்.ஜி.ஆர் வெளியிட்ட போது, “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்” என்று பேசுகிறார். அந்தப் பேச்சை எழுதிக்கொடுத்தவர் ஆர்.எம்.வீரப்பன்.

எம்.ஜி.ஆர் முடிவை ஏற்காமல் கலைஞரோடு இணைந்து நல்ல பதவிகளை அனுபவித்திருக்க முடியும். ஆனால் நட்பின் ஆழம் கருதி துயரிலும் எம்.ஜி.ஆரோடு நின்றார்; எம்.ஜி.ஆர் வென்றார்.

இப்படி பல வரலாற்றுத் தகவல்கள் இந்த ஆவணப்படத்தில் இடம் பெற்றுள்ளன.

பாட்ஷா பட விழாவில் ரஜினி பேசிய கருத்தால் ஆர்.எம்.வீரப்பனுக்கு அமைச்சர் பதவி போனது. அந்த விசயத்தோடு சேர்த்து இன்னும் பல அரிய தகவல்களை ரஜினி சொல்கிறார். ஆர்.எம்.வீரப்பனின் பாடல் வரிகளின் தேர்வு குறித்து வைரமுத்துவும், முத்துலிங்கமும் பேசியிருப்பது சுவாரஸ்யமானவை.

சரத்குமார், திருமாவளவன், தமிழிசை, ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட இன்னும் பல்வேறு ஆளுமைகளின் வழியாக இரண்டு மணி நேரத்தில் ஒரு வெற்றிகரமான மனிதரின் நேர்மையான வரலாற்றை அறிந்து கொள்ள முடிகிறது.

ஆவணப்படம் என்றாலும், இன்றைய இரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு தொகுத்திருக்கிறார் பினு சுப்பிரமணியம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.