சிறுவர்களுக்கான படமெடுப்பது அத்தனை சுலபமல்ல. ரொம்பவே சிம்பிளான கதை. நான்கு சிறுவர்கள். பெத்தப்பா, சைபால், மணி, சலிடப்பா ஆகியோர் நெருக்கமான நண்பர்கள். ஸ்கூல் லீவு.
நான்கு பேரும் யார் வீட்டுத் தோட்டத்து கிணற்றில் நீச்சலடிக்க, அதை ஓனர் பார்த்து அடித்து விரட்டுகிறார். நமக்குன்னு ஒரு கிணறு இருந்தா எவந் நம்பளை துறத்துவான்னு கேள்வி வர, காடு வச்சிருக்கிற பெத்தப்பா எடத்துல கிணறு கட்டலாமேன்னு ஆசைப்படுறாங்க பசங்க. ஆனா அவனோட ஒரே ஒரு பாட்டி அதுக்கு அனுமதிக்க மாட்டேன்குறாங்க. அதுக்கு ஒரு காரணம் இருக்கு. அதையும் மீறி எப்படி கிணறு கட்டுனாங்கன்னுதான் கதை.
செம்ம நாஸ்டால்ஜிக்கான கதை. கதை பசங்க போக்குல போறதுனால அவங்களோட சுவாரஸ்யம் எப்படியெல்லாம் ஸ்கிப்பாகி போகுமோ அப்படியே சுவாரஸ்யம் குறையாம போகுது. நான்கு சிறுவர்களின் நடிப்பு செம்ம. குறிப்பாய் அந்த சைபாலும், பெத்தப்பாவும் ஸ்கோர் செய்கிறார்கள். ஊத்து வருவதாய் நினைத்து பெட்டில் உச்சா போவது. பாட்டிக்கும் பேரனுக்குமான கான்வர்ஷேசன். போகிற போக்கில் பசங்க பேசும் நகைச்சுவை வசனங்கள், பஞ்சர் ஒட்டும் வண்டி வைத்து கொண்டு கிணற்றில் மூழ்கி இறந்த தன் மகனை கண்டுபிடிக்க மனநிலை சரியிலலாத விவேக் ப்ரசன்னா கேரக்டர். பஞ்சர் கண்டுபிடித்தால் அவருக்கு கிடைக்கும் சந்தோஷத்துக்கு காரணமாய் அதை சொல்லும் போது நெஞ்சடைக்கிறது. கொஞ்சம் சிறுவர்கள் எல்லை மீறி கொல்லை என்றெல்லாம் யோசிப்பதை தவிர்த்திருக்கலாம்.
மற்றபடி ஜாலியாய் குடும்பத்தோடு பார்கக் ஒரு படம். கவுதம் வெங்கடேஷின் ஒளிப்பதிவு நீட். குழந்தைகளுக்காக படம் எடுக்க துணிந்து எழுதி இயக்கிய ஹரிகுமாரனுக்கு ஸ்பெஷல் பூங்கொத்து. அவ்வப்போது நினைத்து நினைத்து சிரிக்கும் படியான படம். அமேசான் ப்ரைமில் இருக்கு. புவனேஷ் செல்வனின் இசையும் நீட். Suriya N வாழ்த்துக்கள் இத்தனை சுவாரஸ்யமான குழந்தைகள் படத்தை தயாரித்ததற்காக.
