ரசிகர்களின் மனநிலையைப் புரிந்து அர்த்தமுள்ள கதைகளை திரைப்படங்களாக விநியோகம் செய்வதில் விநியோகஸ்தர்களின் பங்கு முக்கியமானது. அந்த வரிசையில், தமிழ்நாட்டின் விநியோக துறையில் குறிப்பிடத்தக்க நபராக விளங்கும் எஸ். குகன், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் மூலம் மாநிலம் முழுவதும் 56க்கும் மேற்பட்ட படங்களை வெற்றிகரமாக வெளியிட்டுள்ளார். அவரது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகிலும் அவர் தடம் பதித்திருக்கிறார். ‘காந்தாரா’, ‘கே.ஜி.எஃப் அத்தியாயம் 2’, ‘குருப்’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’, மற்றும் ‘இறுகப்பற்று’ போன்ற வெற்றிப் படங்களை தந்ததன் மூலம் அவரது திரை ரசனையை எளிதில் புரிந்து கொள்ளலாம். தற்போது, இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படத்தை நாளை (ஏப்ரல் 24) தமிழகம் முழுவதும் வெளியிட எஸ். குகன் தயாராக உள்ளார்.

படம் குறித்து எஸ். குகன் பகிர்ந்து கொண்டதாவது, “‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கதையின் நேர்மை உடனடியாக என்னை ஈர்த்தது. இந்தப் படம், தற்போதைய தலைமுறையின் உணர்வுகளை உண்மையாக பிரதிபலிப்பதுடன், நவீன காதல் மற்றும் உறவுகளை பற்றி நுட்பமாகவும் ஆழமாகவும் பேசுகிறது. உறவுகளை மையமாகக் கொண்ட கதைகளை நுட்பமாக சொல்வதில் தேர்ந்தவர் காந்தி கிருஷ்ணா. அதை ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் மீண்டும் உறுதி செய்திருக்கிறது. படத்தின் இளம் நடிகர்கள் திறமையாக தங்கள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமாரின் மனதை வருடும் இசை கதைக்கு மேலும் வலு சேர்க்கிறது. உண்மையான, மனதைத் தொடும் திரைப்படங்களைத் தேடும் பர்வையாளர்களுடன் ‘பிரேக்ஃபாஸ்ட்’ ஆழமாக இணையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

நடிகர்கள்: ராணவ், ரோஸ்மின், சம்பத் ராஜ், கஸ்தூரி, கிருத்திக் மோகன், அமிதா ரங்கநாத் மற்றும் பலர்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

தயாரிப்பாளர்: கிரிஜா வரதராஜ்,
இயக்குநர்: காந்தி கிருஷ்ணா,
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்,
பாடல் வரிகள்: வைரமுத்து மற்றும் விவேக்,

உலகம் முழுவதும் ஏப்ரல் 24 அன்று ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.