இதென்ன கேவலமான ஹெட்லைன்..என்ன வெட்கங்கெட்ட பொழப்பு இது.?
இசைஞானி இளையராஜாவுக்கு நாட்டின் இரண்டா வது உயரிய விருதான பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.. அது முழுக்க முழுக்க அவரின் இசைக்கான அங்கீகாரம்..
ஊரை ஏமாத்தற கண்ட கண்ட கழிசடைகளுக்கு அடிக்கடி போகும் விருது, மீண்டும் ஒரு முறை தகுதியானவருக்கு போய் பெருமையை தேடிக்கொண்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைப்பு என்ன சொல்லவருகிறது?
நீ என்னதான் விருது உயரத்துக்கு எட்டிப்பிடித்தா லும் நீ ஆப்ட்ரால் தலித்துதானே என்கிறதா?
தலித்தெல்லாம் எட்டிப்பிடிக்கமுடியாத அளவுக்கு, பத்மவிபூஷண் விருது பெரிய அப்பா டக்கர் விருது, மேல் சாதி வர்க்கத்தினருக்கு மட்டுமே உரிய விருது..இப்போது அதை ஒரு தலித் எட்டிப்பிடித்து விட்டார் என்று சொல்லவருகிறார்களா?
ஒரு பிராமினோ, ஒரு செட்டியாரோ இதே விருதை வாங்கும்போது, பிராமின்/ செட்டியார் அவுட்ரீச் வித் விஸ்நாத கோபாலன்ஸ் பத்மா என்று, டைட்டில் போட்டிருப்பார்களா?
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களை இசையால் வசீகரித்து கடவுள் அளவுக்கு கொண்டாடப்படும் இசைஞானி இளைய ராஜாவை, அவருக்கு விருது கிடைக்கும் செய்தியின் தலைப்பில் ஒரு தலித் என்று காட்டுகிறீர்கள் என்றால் இது சாதி அரிப்பு அல்லாமல் வேறென்ன?
,இதுதான் பத்திரிகை தர்மமா? மறைந்த ராம்நாத் கோயங்கா இப்படித்தான் சொல்லிக்கொடுத்தாரா?
இதுமாதிரி பொழப்புக்கு…..வேணாம்..
முகநூலில் ஏழுமலை வெங்கடேசன்