ஒழுக்கமாக கதை கேட்டு படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தாமல், சிம்பு பாணியில் பாட்டு, பாட்டி, பார்ட்டி,டி.வி.ஷோக்கள் என்று கூத்தடித்து வந்த ஆர்யாவுக்கு சமீபத்தில் வெளிவந்த ‘கஜினிகாந்த்’தின் படு தோல்வி பேரதிர்ச்சியை அளித்துள்ளது.
‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து குத்திய சந்தோஷ் ஜெயக்குமார் ‘கஜினிகாந்த்’ மூலம் தன்னை தமிழ்சினிமாவின் இருட்டு அறைக்குள் தள்ளி முரட்டுக்குத்து குத்திவிட்டதாக நண்பர்களிடம் புலம்பித்தள்ளிக்கொண்டிருக்கிறார் ஆர்யா.
இத்தனைக்கும் இது ‘பலே பலே மகாடியோ’ என்கிற தெலுங்குப்படத்தின் ரீமேக்தான்.
தொடர் தோல்விகளின் அவமானத்திலிருந்து மீழ ‘கஜினிகாந்துக்கு சீக்கிரமே ஒரு சக்சஸ் மீட் வைங்க சார்’ என்று தயாரிப்பாளர் கிரீன் டீ ஞானவேல்ராஜாவை நச்சரித்துக்கொண்டிருக்கிறாராம் பார்ட்டி பாய்.