பரியனின் தந்தையுடைய கேவல் இன்னமும் செவிகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அதை ஒரு காட்சியாக பார்க்க மனம் ஒப்பவில்லை. இந்த அழுகுரலும் அவமானமும் ரத்தமும் ஓலமும் கொண்ட வாழ்வை வேடிக்கை பார்த்த மௌன சாட்சிகள் தாம் நாம் என்கிற குற்றவுணர்வும் எழுகிறது.
இப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை.. திர்நெல்வேலி என்றால் பகட்டு வீரமும் அரிவாள் வீச்சும் என்கிற பாவனைக் கதைகளுக்கு மத்தியில் ஒரு நிஜமான் சலங்கை சப்தத்தையும் மேளத்தையும் முழங்கி இருக்கிறான் தம்பி.மாரி செல்வராஜ்
வாசல் படிக்கட்டை மேசையாக்கிய அந்த காட்சியழகு என் போன்ற திருநெல்வேலியை மனதில் சுமந்து திரியும் மனிதர்களுக்கு கண்கலங்க செய்யும் பால்ய மீட்டெடுப்பு.
இது ஒரு ரசிகன் பார்க்க வேண்டிய படமில்லை ஒட்டு மொத்த சமூகமும் பார்க்க வேண்டியபடம்..சாதியத்தை கொல்லாமல் சமத்துவம் வெல்லாது என்பதை அழுத்தம் திருத்தமாக சொன்ன திரைப்படம்
ஒரு நல்ல திரைமொழியும் நகைச்சுவையும் கொண்ட தரமான படைப்பு
எழுதி இயக்கிய தம்பி மாரி செல்வராஜுக்கும் அவனது குழுவினருக்கும்
இப்படி ஒரு காத்திரமான படைப்பை துணிந்து தயாரித்த
அன்புத் தம்பி பா.ரஞ்சித்திற்கும்
அன்பு வாழ்த்துக்களும்
நீலவணக்கங்களும்
ஆழ்மனதிலிருந்து உரத்தகுரலில் கம்பீரமாக சொல்கிறேன்
ஜெய் பீம்….!