இந்தியப் பிரஜை என்று யாரை வரையறுப்பீர்கள்? அதற்கு நிரூபணமாக என்ன ஆதாரம் கொடுப்பீர்கள் ?

பெற்றோர்களின் பூர்வீகத்தையும் நிரூபிக்கும் டாக்குமெண்ட் இருந்தால் தான் உங்கள் குடியுரிமையும் உறுதியாகும் என்பது சரியா ?

ஆதார் கார்டு செல்லும் என்று சும்மா அறிவித்தால் போதுமா ? அரசியல் சட்டப்படி ஆதார் கார்டு குடியுரிமையின் அத்தாட்சியாக கருதப்படமுடியாது என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. எனவே, ஆதார் கார்டை ஏற்றுக்கொள்ளவே முதலில் சட்டத்திருத்தம் வேண்டும்.
மூன்று நாடுகளிலிருந்து வருபவர்கள் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு வந்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டும் ? துன்புறுத்தப்பட்டோம் என்று சும்மா வாயில் சொல்லிவிட்டு யார் வந்தாலும் குடியுரிமை கொடுப்பீர்களா?

இந்தக் குடியுரிமை சட்டத்திருத்ததுக்கு முன் இந்த நாடுகளில் இருந்து குடியுரிமை கேட்டு வந்த எல்லோரையும் குடியுரிமை தரமுடியாது என்று திருப்பி அனுப்பிக் கொண்டுதான் இருந்தீர்களா?

முழு வீடியோவையும் கீழே உள்ள இணைப்பில் காணுங்கள்.

https://www.facebook.com/groups/NTKsupporters/permalink/2621320761297743/

Related Images: