நடிகை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் துவக்கப்பட்ட ‘நெற்றிக்கண்’படம் முதல் ஷெட்யூலோடு கிடப்பில் போடப்பட்டு விட்டதாக வதந்திகள் கிளம்பியுள்ளன.

சித்தார்த், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அவள்’. சித்தார்த் தயாரித்த இந்தப் படம் 2017 ஆம் ஆண்டு வெளியானது. அந்தப்படத்தை இயக்கிய மிலிந்த்ராவ், அதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தைத் தொடங்கியிருக்கிறார். இப்படத்தை விக்னேஷ்சிவன் தயாரிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது.ரஜினி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘நெற்றிக்கண்’. அந்தப் படத்தைத் தயாரித்த கவிதாலயா நிறுவனத்தினரிடமிருந்து அதிகாரப்பூர்வமாகத் தலைப்புக்கு உரிமை பெற்று வைத்துள்ளனர்.

செப்டம்பர் 15 அன்று அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் நடந்த நிலையில் அப்படியே நின்றிருக்கிறதாம்.படப்பிடிப்பைத் தொடர பணம் இல்லாததால் நின்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.முன்னணி நடிகையாகத் திகழும் நயன்தாரா படத்துக்கு இந்த நிலையா? என்றால், இந்தப்படம் தயாரிக்க ஓரிடத்திலிருந்து பணம் எதிர்பார்த்தார்கள் அது சரிவரக் கிடைக்காததால் தடை ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள். அதாவது சொந்தப்படம் எடுப்பாங்களாம். ஆனா சொந்தக் காசு போட்டு எடுக்கமாட்டாங்களாம்.

Related Images: