பாலகிருஷ்ணன் ஐ ஏ எஸ் அவர்கள் பல ஆண்டுகளாக சங்க இலக்கியங்களை தாவரவியல் நோக்கில் ஆய்வு செய்து தரவுகளை திரட்டி அதிலிருந்து சிந்து வெளி நாகரிகத்திற்கும் கீழடி தமிழர் வைகை நதி நாகரிகத்திற்கும் இடையே என்ன தொடர்பு என்று தரவுகள் மூலம் ஆராய்ந்துள்ளார்.
அந்த ஆய்வின் தொகுப்பே அவர் எழுதியுள்ள Journey of a Civilization, from Indus to Vaigai எனும் ஆங்கில நூல்.
அதை வெளியீட்டு கீழடி தொல்லியல் ஆய்வை முன்னெடுத்து நடத்திய ஆட்சியர் உதய சந்திரன் அவர்கள் பேசிய உரை.
பாகிஸ்தானில் கரிகாலன் , சேர சோழ பாண்டியர்கள் உட்பட பல தமிழ் பெயர்கள் இன்றும் புழக்கத்தில் உள்ளன. இமயமலை பல்வேறு பாடல்களில் ஏன் குறிப்பிடப்படுகிறது என்று பல விஷயங்கள் பற்றி விவரிக்கிறார்.