பாஜக கொண்டு வந்த தேசிய குடியுரிமைச் சட்டம் (CAB / CAA) பெரும்பான்மை மக்களின் குடியுரிமையை அரசு இஷ்டம் போல பறிக்கலாம் என்பதான சட்டம். அதற்கு எதிராகத் தான் நாடெங்கும் போராட்டங்கள் நடந்துகொண்டுள்ளன.

இந்நிலையில் இதன் அடுத்த நகர்வாக NRC (National Register for Citizenship) எனப்படும் தேசிய குடியுரிமைப் பதிவேடு பணியை நாடெங்கும் நடத்த 30 ஆயிரம் கோடிகள் ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. NRC ல் முஸ்லீம்களை கழித்துக் கட்டவே CAB கொண்டுவரப்பட்டது.

CAB மற்றும் NRC க்கு எதிப்பு கிளம்பியுள்ள நிலையில் முந்தைய காங்கிரஸ் அரசு செய்யவிருந்த தேசிய மக்கள்தொகை பதிவேடு அதாவது NPR (National Population Register) எனப்படும் மைல்டான வெர்ஷனை எடுக்கிறது மத்திய அரசு.

NPR ஐ வேறொன்றுமில்லை வெறும் சென்சஸ் கணக்கெடுப்பு தான் என்று அரசு கூறிவரும் நிலையில் , இரண்டும் வேறு வேறு என்று இந்தக் காணொலியில் விளக்குகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்கள்.

YouTube player


Related Images: