சமீபத்தில் நடந்த துக்ளக் விழாவில் துக்ளக் பத்திரிக்கையை பெருமையாகப் பேசுவதற்காக, திரு ரஜனிகாந்த் ஏதோ சில தகவல்களை கேள்விப்பட்டும், படித்ததுமான வகையில், பெரியாரை வம்புக்கிழுத்து பேசினார்.

ராமர் சிலையும், சீதா தேவி சிலையும் நிர்வாணமாக கொண்டுபோகப்பட்டது என்றார் ரஜினி. ஆனால் உண்மையில் சீதா தேவி படம் அந்த ஊர்வலத்தில் கொண்டு வரப்படவே இல்லை. ராமர் சிலையும் வழக்கமான ஒரு ராமன் சிலையாகவே கொண்டுபோகப்பட்டது.

அந்த ஊர்வலத்தின் நோக்கம் இதிகாசங்கள் ஆரியரை உயர்வாகக் காட்டுவதை எதிர்த்தும், ராமகாதையில் ராவணனை வில்லனாக காட்டி எரிப்பதை கண்டித்து பதிலுக்கு ராமனை எரித்துக் காட்டுவதும், இதிகாசங்களில் உள்ள புரட்டான விஷயங்களை விளக்கவும் தான்.

தேவாலய பாதுகாப்பு சங்கம் என்கிற இந்து மத அமைப்பு பெரியாரின் இந்த ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தர கருப்புக் கொடி காட்ட விரும்பியது. முதல்வர் கலைஞர் பெரியாரிடம் இதுபற்றி கேட்ட போது, பெரியார் பரவாயில்லை அவர்கள் பாட்டுக்கு கருப்புக் கொடி காட்டட்டும் என்று கூறிவிட்டார்.

ஊர்வலம் கடந்து போகும் போது , 400 போலீசார் பாதுகாப்பு தர நின்றிருந்த தேவாலய பாதுகாப்பு அமைப்பினர் பக்கம் இருந்து ஒரு செருப்பு ஒன்று பறந்து வந்து கூட்டத்தில் விழுந்தது.

இதனால் கோபமடைந்த திராவிடர் கழக தோழர்கள் அந்த செருப்பை எடுத்து ஊர்வலத்தில் எடுத்து வந்த ராமர் படத்தை அடித்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து பல தொண்டர்களும் ராமர் படத்தை செருப்பால் அடித்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்வை அப்போது வெளிவந்த துக்ளக் இதழ் பெரியார் ராமரை செருப்பால் அடிப்பது போலவும் அதைப் பார்த்து கருணாநிதி கைகொட்டி சிரிப்பது போலவும் திரித்து வெளியிட்டது. இப்படி முதலமைச்சரையும், பெரியாரையும் பற்றி அவதூறாக அட்டைப் படம் போட்டதால் அந்தப் பத்திரிக்கைப் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதைத் தொடர்ந்து வந்த தேர்தலில் அதே படத்தை போட்டு திமுகவை வீழ்த்த திட்டமிட்டு 3 லட்சம் போஸ்டர்கள் வரை அடித்து வைத்துள்ளனர். இதுபற்றி முதல்வர் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் திமுகவுக்கும் இந்த ஊர்வலத்திற்கும் சம்பந்தமில்லாவிட்டாலும் இதை வைத்து அரசியல் செய்பவர்கள் மக்களிடையே திமுகவை இந்து எதிர்ப்பு கட்சியாக பிரச்சாரம் செய்வார்கள் என்பதால் அந்த போஸ்டர்களை ஒட்டவிடாமல் பறிமுதல் செய்தார்.

இந்த விஷயங்களை பெரியாரே அடுத்து நடந்த ஒரு கூட்டத்தில் மேடையில் இதுபற்றி விவரித்துள்ளார்.

அந்த ஆடியோவை கீீழே உள்ள முகநூல் இணைப்பில் கேளுங்கள்.

https://m.facebook.com/story.php?story_fbid=2545587032385209&id=100008018118084&sfnsn=scwspmo&d=n&vh=i

Related Images: