சமீபத்தில் கர்நாடகாவில் பிடார் நகரில் உள்ள ஷாகீன் என்னும் இஸ்லாமியப் பள்ளியில் 5ஆம் வகுப்பு 6ஆம் வகுப்பு மாணவர்களை வைத்து CAA வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடகம் பள்ளி விழாவில் நடத்தப்பட்டது.
அந்நாடகத்தில் CAA என்று யாராவது எங்களிடம் ஆதாரம் கேட்டால் அவர்களுக்கு செருப்பைக் காட்டுவோம் என்று வசனம் கூறி மாணவர்கள் நடித்துள்ளனர்.
இதற்கு எதிப்பு தெரிவித்து ABVP என்கிற இந்துத்துவா அமைப்பிலிருந்து ஒரு புகார் தெரிவிக்கப்பட்டதும் NIA எனப்படும் மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவை வைத்து விசாரணை என்று பள்ளியில் படிக்கும் சிறு பையன்களை பிடித்து டார்ச்சர் செய்தது அரசு. பள்ளியின் ஆசிரியை ஒருவரும், நாடகத்தில் நடித்த ஒரு பையனின் அம்மாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
இது இப்படியிருக்க சமீபத்தில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் டெல்லியில் CAA வுக்கு எதிரான ஊர்வலம் நடத்தியபோது அதில் காவி உடையணிந்த ஒரு இந்துத் தீவிரவாதி கத்தியபடியே துப்பாக்கியை நீட்டி ஊர்வலத்தை நோக்கி சுட்டதில் ஒரு மாணவர் படுகாயமடைந்தார். அந்தத் தீவிரவாதி மேல் ஒரு வழக்கு கூட பதியவில்லை அரசு. கீழே காணுங்கள் அந்த துப்பாக்கிச் சூட்டை..