21.02.2020 அன்று சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது விநியோகஸ்தர்கள் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டது.

20.02.2020 சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர் , செயலாளர் மன்னன் மற்றும் நிர்வாகிகளும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்ட கூட்டுக் கூட்டம் அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை வளாகத்தில் நடைபெற்றது.

அதில் கீழ்கண்ட தீர்மானங்கள் இரு தரப்பினர் மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

  1. தற்போது திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான GST (12%) வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு LBT (8%) கேளிக்கை வரி செலுத்துவதால் இது திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது. ஆகையால் இரு தரப்பினரும் இணைந்து மேற்படி வரியினை (8%) முற்றிலும் ரத்து செய்ய தமிழக அரசுக்குக் கோரிக்கை மனு அளிப்பது என்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
  2. தர்பார் திரைப்படத்தினை விநியோகம் செய்த வகையில் எழுந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதத்தில் தற்போது திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் இணைந்து தர்பார் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா மற்றும் அந்தத் திரைப்படத்தில் பங்குபெற்ற நடிகர் மற்றும் இயக்குநர் அவர்களிடம் தார்மீக ரீதியில் அணுகி மேற்படி பிரச்சனை குறித்து பேசி சுமூகத் தீர்வு காண்பது என்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
  3. புதிய திரைப்படம் வெளியாகி 8-வார காலத்திற்கு முன்பு Digital Platform என்று அழைக்கப்படும் Amazon, Netflix போன்றவற்றில் வெளியிடக் கூடாது என்றும், தற்போது பாலிவுட்டில் பின்பற்றப்படும் நடைமுறை போலவே இங்கு தமிழகத்திலும் பின்பற்றப்பட வேண்டும் என தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
  4. புதிய திரைப்படம் வெளியாகி 100-நாட்களுக்கு முன்பாக எந்த ஒரு Satellite Channel-களிலும் அந்த திரைப்படம் ஒளிபரப்பக் கூடாது என்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
  5. திரையரங்குகளில் வசூலிக்கப்படும் நுழைவுக்கட்டணம், மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் கட்டண விகிதாச்சாரத்தையும் (Terms) சரிசெய்ய தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திலிருந்து 9-நபர்கள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திலிருந்து 9-நபர்கள் ஆக மொத்தம் 18-நபர்கள் என கொண்ட குழு அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டு அதனை இனிவரும் காலங்களில் முறைப்படுத்துவது என்று தீர்மானம் செய்யப்பட்டது.
  6. இனிவரும் காலங்களில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை MG/Outrate அடிப்படையில் விநியோகம் செய்யும் சூழ்நிலை வரும் நிலையில் படத்தினை திரையிட்டு பார்க்காமல் (Preview Show) வியாபாரம் செய்வது இல்லை என்று இரு தரப்பினரும் ஒரு மனதாக முடிவு செய்து தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.