WordPress database error: [You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'FROM 4bz_posts WHERE 1=1 AND ((4bz_posts.post_type = 'post' AND (4bz_...' at line 2]
SELECT SQL_CALC_FOUND_ROWS all FROM 4bz_posts WHERE 1=1 AND ((4bz_posts.post_type = 'post' AND (4bz_posts.post_status = 'publish'))) ORDER BY 4bz_posts.post_date DESC LIMIT 0, 15

WordPress database error: [You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'FROM 4bz_posts WHERE 1=1 AND ((4bz_posts.post_type = 'post' AND (4bz_...' at line 2]
SELECT SQL_CALC_FOUND_ROWS all FROM 4bz_posts WHERE 1=1 AND ((4bz_posts.post_type = 'post' AND (4bz_posts.post_status = 'publish'))) ORDER BY 4bz_posts.post_date DESC LIMIT 0, 15

முதலாளித்துவ சமூகத்தில் எல்லா பட்ஜெட்டுகளுமே வருமான மறு பங்கீட்டின் மடை மாற்றத்தை ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாக செய்வது நடந்தேறும். இந்த பட்ஜெட்டில் உள்ள ஒரே வித்தியாசம், அதை மூர்க்கத்தனமாக அரங்கேற்றி இருப்பதுதான். ஒரு ஆல் ரவுண்ட் அட்டாக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. சமூகத்தின் உழைப்பாளி மக்களின் எல்லாப் பிரிவினரும் அதன் குறியில் இருந்து தப்பவில்லை. மக்கள் மத்தியில் இந்த பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு எழலாம் என்பது ஆட்சியாளர்களுக்கு தெரியும். ஆகவே திசை திருப்பலையும் பட்ஜெட் உரையிலேயே அவர்கள் செய்துள்ளார்கள். சரஸ்வதி சிந்து என்று பேசியிருப்பது அவைகளில் ஒன்றாகும். செல்வம் சம்பந்தப்பட்டது என்பதால் லட்சுமி பற்றி பேசியிருந்தால் கூட வேறுபட்ட கருத்து இருப்பினும் கூட ஏதோ ஒரு லாஜிக் இருந்திருக்கும். எப்படி பேசுவார்கள்! லட்சுமியை பற்றி பேசுகிற நிலைமை இல்லையே. ஆகவே சரஸ்வதியை பேசி திசை திருப்பியுள்ளார்கள்.


டிங்கரிங்

டிங்கரிங் என்றால் பூச்சு வேலை. பட்ஜெட் கணக்குகளில் அந்த பூச்சு வேலையை நிதியமைச்சர் செய்தாலும் உண்மை நிலவரம் பல்லிளித்து சிரிப்பதை மறைக்க முடியவில்லை.

  • மொத்த வரி வருவாய் 2019- 20 க்கு ரூ 24,61,194 கோடிகள் பட்ஜெட் மதிப்பீடாக போடப்பட்டிருந்தது. தற்போது வெளியிடப்பட்ட திருத்திய மதிப்பீடின் அளவு ரூ 21,63,423 கோடிகள் ஆகும். அதாவது பள்ளம் ரூ 2,97,772 கோடிகள். இவ்வளவு பெரிய பள்ளம் இருக்கின்ற நிலையிலும் கூட 2020 – 21 பட்ஜெட்டில் ரூ 24, 23, 000 எதிர்பார்க்கப்படுவதாக காண்பிக்கப்படுகிறது. இது சாத்தியமான ஒன்றா?

*மாநிலங்களுக்கான மத்திய வரி வருவாய் பங்கு என்பது 2019-20 பட்ஜெட் மதிப்பீடின் படி 8.1 லட்சம் கோடிகள் ஆகும். திருத்திய மதிப்பீடோ ரூ 6.6 லட்சம் கோடி. இதில் ஏற்பட்டிருக்கும் பள்ளம் 1.5 லட்சம் கோடி. இந்த 2020-21 பட்ஜெட்டில், ரூ 7.8 லட்சம் கோடி என மதிப்பிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. இதுவும் சாத்தியமா?

  • பட்ஜெட் செலவினங்களை பொருத்த வரையில் நடப்பு நிதியாண்டு பட்ஜெட் மதிப்பீடிற்கும், திருத்திய மதிப்பீடிற்குமான இடைவெளியாக ரூ 88,000 கோடி உள்ளது. ஆனாலும் 2020- 21 ஆண்டிற்கான பட்ஜெட்டில் ரூ. 27.86 லட்சம் கோடியில் இருந்து ரூ. 30.42 லட்சம் கோடிகளாக உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இது 11 சதவீத உயர்வு ஆகும். இது நடக்கவேண்டும் என்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத உயர்வு தேவைப்படும். (நடப்பு விலை மதிப்பீட்டிலான ஜி.டி.பி அடிப்படையில்) இது நடப்பது சாத்தியமா?

ஆனாலும், இப்படி நிறைய எண் விளையாட்டுகள் இந்த பட்ஜெட்டில் உள்ளன. பொதுவாக பட்ஜெட் மதிப்பீடு (BE), திருத்திய மதிப்பீடு(RE), உண்மை மதிப்பீடு (AE) என்பவை வேறுபட்டுத்தான் இருக்கும் என்றாலும் அவற்றிற்கான இடைவெளி இவ்வளவு பெரிதாக இருக்கக் கூடாது. ( உண்மை நிலவரம் வெளியே வர இரண்டு ஆண்டுகள் கூட ஆகிவிடுகின்றன)

எதற்காக இவ்வளவு பூச்சு வேலைகள்? இந்த பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தின் (எப்.ஆர்.பி.எம்) வரையறைகளுக்காகவும் டிங்கரிங் வேலைகள் செய்யப்பட்டுள்ளன. எப்.ஆர்.பி.எம் என்ற சட்டத்தின் நோக்கமே ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட பொருளாதார பாதையில் மக்களின் கருத்துக்கு இடமின்றி பயணிப்பதே ஆகும். 2019-20 ல் 3.3சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இப்போது 3.8 சதவீதத்தை தொட்டுள்ளது. சட்டம் மீறப்பட்டு விட்டதா? இல்லை. எப்.ஆர்.பி.எம் சட்டத்தின் பிரிவு 4 (3) ஓர் தளர்வை தருகிறது. 0.5 சதவீதம் வரை நிர்ணய விகிதத்தில் இருந்து விலகல் இருக்கலாம். அதற்காக “கரெக்ட்” ஆக கணக்குகளில் பூச்சு வேலை நடந்துள்ளது. 0.5 அளவிற்கே விலகல் இருப்பது போன்று ஒப்பனை செய்யப்பட்டுள்ளது. முக்கியமான செலவினங்கள் வெட்டப்பட்டுள்ளன. வருமானங்கள் அதீதமாய் மதிப்பிடப்பட்டுள்ளன. இந்த எப்.ஆர்.பி.எம் சட்டம் நவீன தாராள மயப் பாதையில் இருந்து அரசு விலகி செல்லாமல் இருப்பதை உறுதி செய்கிறது. இந்த பட்ஜெட் நிதி ஒழுங்கு என்ற பெயரில்தான் மூர்க்கமான பல தாக்குதல்களை தொடுத்துள்ளது.


மிஸ் ஆன கிஸான் ரயில்

பிரதமரின் கிசான் திட்டத்தில் அவர்கள் இலக்கு 14.5 கோடி விவசாயிகளை தொடுவது. ஆனால் இத்திட்டத்தில் பதிவு ஆகியிருக்கிற விவசாயிகள் 62 சதவீதம் மட்டுமே. அதிலும் முழு பயன் பெற்றவர்களை மட்டும் பார்த்தால் மொத்த இலக்கில் 50 சதவீதத்திற்கு சரிந்து விடுகிறது. இப்படி பாதிக் கிணறு தாண்டுவதையே வழக்கமாக வைத்துள்ளார்கள்.
கிசான் ரயில் போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருந்தாலும் பட்ஜெட் ரயில் விவசாயிகளை ஏற்றிக் கொள்ளாமலேயே சென்று விட்டது என்பதே உண்மை.

அரசு விவசாய கொள்முதலை கைவிடுவதை நோக்கி நகர்கிறதோ என்ற சந்தேகம் வருகிற அளவிற்கு உச்சகட்ட அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

2019-20 ல் உணவு மானிய ஒதுக்கீடு 1,84,220 கோடிகளாக இருந்தன. இப்போது அது 1,08,698 கோடிகளாக பெரும் சரிவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது.
நிதி பற்றாக்குறையை குறைத்து காட்டுவதற்காக அரசு கடன் வாங்குவதற்கு பதிலாக இந்திய உணவுக் கழகத்தை கடன் வாங்குகிற நிலைமைக்கு திட்டமிட்டு தள்ளியுள்ளது. அரசு கடன் திரட்டினால் வட்டி குறைவாக இருக்கும். இந்திய உணவு கழகம் வங்கிக் கடன் வாங்கினால் அதிக வட்டிக்கு வாங்க வேண்டி வரும். இது உணவுப்பாதுகாப்பை சிதைக்கும். அரசு கொள்முதலை பாதிக்கும்.

அரசின் ஆதரவு விலைகளை விட குறைவாக இருப்பதால் விவசாயிகள் வருமானம் கடும் பாதிப்பிற்கு ஆளாகும். இந்த லட்சணத்தில் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாவது என்ற வாய் ஜாலங்கள் எல்லாம் எப்படி நடக்கும்?

ஒரு புறம் இப்படி வருமானம் பாதிக்கப்படும் போது மறுபுறம் டீசல், உரம், மின்சாரம், டிராக்டர்கள், ஆயில், கால்நடை தீவனம், பூச்சிக் கொல்லி மருந்து ஆகிய இடுபொருள் விலைகள் ஏறியுள்ளன. டீசல் விலைகள் கிட்டத்தட்ட 10 சதவீதமும், ஆயில் 13 சதவீதமும் அதிகரித்துள்ளன. பால் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்குவது பற்றி பட்ஜெட் பேசியுள்ளது. ஆனால் கால் நடை தீவன விலை உயர்வும், கால்நடை மருத்துவ செலவினங்களின் உயர்வும் அதை அனுமதிக்குமா என்பது கேள்வி. உர மானியம் போன பட்ஜெட்டில் ரூ 80000 கோடிகள். திருத்திய மதிப்பீடு ரூ 79997 கோடிகள். ஆனால் 2020-21 பட்ஜெட்டில் ஒதுக்கீடு ரூ 71309 கோடிகள். ஏதாவது தர்க்க நியாயம் உள்ளதா?

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கதையை முடித்து விடுவார்கள் போலிருக்கிறது. 2019- 20 ல் ரூ 71000 கோடியாக இருந்த ஒதுக்கீடு 2020-21 ல் 61500 கோடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. இது 2018-19 தொகையான ரூ 61815 கோடிகளை விட குறைவான ஒதுக்கீடு ஆகும். 2018- 19 ல் கூலி பாக்கி வேறு இருந்தது என்பதையும் சேர்த்துப் பார்த்தால் எவ்வளவு குரூரமான முன் மொழிவு என்பதை புரிந்து கொள்ள இயலும்.
விவசாயக் கடன் 11 சதவீதம் உயரும் என பட்ஜெட் அறிவித்துள்ளது. இந்திய விவசாயிகளில் பெரும்பாலானோர் நிறுவனக் கடன் பெறுபவர்களாக இல்லை. கந்து வட்டி வலைக்குள் தான் இருக்கிறார்கள். எனவே இந்த அறிவிப்புகள் எல்லாம் உண்மையில் விவசாயிகளைப் போய் சேருமா?


தீம் சாங்கும், சோகப்பாட்டும்

“ஆர்வமிக்க இந்தியா” (ASPIRATIONAL INDIA) என்பது பட்ஜெட்டின் “தீம் சாங்” என்றாலும் இந்திய தொழில்கள் கச்சா பொருட்களுக்கும், தொழில் நுட்பத்திற்கும் அந்நிய நாடுகளை நம்பி இருக்க வேண்டிய நிலைமையை மாற்ற ஓர் அடி கூட எடுத்து வைக்கவில்லை. ஆராய்ச்சிக்கான அறிவிப்போ, ஒதுக்கீடோ குறிப்பிடத் தக்க அளவு ஒன்றுமில்லை.

உலகம் முழுவதும் 2019 ல் பதிவுக்காக தரப்பட்டுள்ள காப்புரிமை விண்ணப்பங்களில் அமெரிக்காவை சீனா விஞ்சியுள்ளது. அதன் ஹூவாய் நிறுவனம் காப்புரிமை விண்ணப்பத்தில் உலகில் முதல் இடத்தில் இல்லது என்பதையும் இங்கு நினைவு கூருவது பொருத்தமானது. சீனாவின் இந்த வளர்ச்சி இந்திய பொருளாதாரத்திலேயே பிரதிபலிப்பதை மருந்துகள் உற்பத்தியில் காண முடிகிறது.

தேசமே நலமா?

தேசிய உடல் நலக் கொள்கை ரூ 1.12 லட்சம் கோடிகள் தேவை என கூறுகிறது. இந்த பட்ஜெட்டில் உடல் நலத்திற்கான ஒதுக்கீடு ரூ 65011 கோடிகள். 58 சதவீதம் மட்டுமே. பொது மருத்துவம் சிதைக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவமனை படுக்கை வசதி அதிகரிப்பில் 80 சதவீதத்தை தனியார் மருத்துவ மனைகளே செய்துள்ளன எனில் மருத்துவம் எவ்வளவு வணிக மயம் ஆகியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
“ஆயுஷ்மான் பாரத்” திட்டத்திற்கு சென்ற பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 6400 கோடிகள். டிசம்பர் வரை 16 சதவீதம் மட்டுமே (1014 கோடிகள்) மத்திய அரசால் செலவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, குஜராத், ஆந்திரா, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் அவர்கள் கோரியுள்ள தொகை மத்திய அரசிடமிருந்து வராமல் தவிக்கின்றன. கேரளா கோரியுள்ளதில் 39 சதவீதம் மட்டுமே தரப்பட்டிருப்பது ஓர் எடுத்துக்காட்டு.

இந்த பட்ஜெட் ஓர் அபாயகரமான முன் மொழிவையும் வைத்திருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிலமும் தந்து அவர்களை மாவட்ட அரசு பொது மருத்துவ மனைகளுடன் இணைப்பது என்பதாகும். வளங்களை மடை மாற்றம் செய்வதில் எந்த அளவிற்கு இந்த பட்ஜெட் சென்றுள்ளது என்பதற்கு இது சாட்சியம்.

இந்திய மருந்து உற்பத்தி 140 நாடுகளுக்கு ஏற்றுமதி ஆவதாகும். “உலகத்தின் பார்மசி” என்று இந்தியாவை சொல்வார்கள். ஆனால் இந்த மருந்து உற்பத்திக்கு தேவையான கச்சா பொருட்கள் (API- Active Pharma Ingredients) 69 சதவீதம் சீனாவில் இருந்துதான் வருகின்றன. 1994 ல் பிளேக் நோயை எதிர்கொள்வதில் பெரும் பங்கை ஆற்றிய ஐ.டி.பி.எல் போன்ற பலமான நிறுவனங்களை உருவாக்க, வளர்க்க வேண்டியதன் அவசியத்தை இந்த பட்ஜெட் உணர்ந்து எதுவும் செய்யவில்லை. இந்தியாவில் சிரிஞ்சை உற்பத்தி செயகிற நாம் ஊசிகளை இறக்குமதி செய்கின்றோம். இந்த பட்ஜெட் இறக்குமதி வரிகளை உயர்த்தியுள்ளது. உள்நாட்டு உற்பத்திக்கான சந்தையை உறுதி செய்வதாக கூறியுள்ளது. ஆனால் இருதயங்களில் பொருத்தப்படும் ஸ்டென்டுகள், ரேடியேஷன் இயந்திரங்கள், ஹை எண்ட் ஸ்கேனர் ஆகியன வெளி நாடுகளில் இருந்தே எதிர்பார்க்கப்படுகிற நிலையில் இந்த வரி உயர்வு இறக்குமதியை குறைக்காது; மாறாக நுகர்வோர் தலையில் சுமையையே ஏற்றப் போகிறது.

வெற்று முழக்கம்

மிக ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட பல திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டுள்ளன.
“மேக் இன் இந்தியா” பற்றிப் பேசுகிற ஆட்சியாளர்கள் ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடுகள் குறித்து கண்டு கொள்ளவில்லை. இதோ இன்னொரு உதாரணம்.

மின்னணு உற்பத்தியிலும் மருந்து உற்பத்தி போன்ற நிலைமையே. இந்தியாவில் 6 ஆண்டுகளில் மொபைல் போன் உற்பத்தி தலங்கள் 2 ல் இருந்து 268 ஆக உயர்ந்துள்ளது. 4.58 லட்சம் கோடிகள் மதிப்புள்ள வணிகம் நடைபெறுகிறது. ஆனால் அவை பெரும்பாலும் வெறும் “இணைப்பு” (Assembly) தலங்களாகவே உள்ளன; அவற்றில் நடைபெறுகின்ற மதிப்பு கூட்டல் (Value addition) 7 முதல் 8 சதவீதம் மட்டுமே ஆகும். இறக்குமதியை சார்ந்து இருப்பதால் இதன் வருவாயில் 93 சதவீதம் சீனாவுக்கு செல்கிறது. (இந்து பிசினஸ் லைன்- 06.02.2020). ஆராய்ச்சிக்கான முனைப்பு அற்ற பட்ஜெட் இவற்றையெல்லாம் எப்படி சரி செய்யப் போகிறது? ஆர்வமிக்க இந்தியா எப்படி உருவாகப் போகிறது? புதுப் புது முழக்கங்கள் பிறக்கும் போது பழைய முழக்கங்கள் சத்தமில்லாமல் மூச்சை விட்டு விடுகின்றன.


*இல்லை பெருக்கல் விளைவு

பெருக்கல் விளைவு (Multiplier effect) என்பது பொருளாதாரத்தில் சாமானிய, நடுத்தர மக்கள் கைகளில் பணம் புழங்குவது ஆகும். இது சந்தையில் கிராக்கி- உற்பத்தி தூண்டுதல்- வேலை வாய்ப்பு- கூலி- கிராக்கி என்கிற பெருக்கல் விளைவை உருவாக்கும். இதற்கு பட்ஜெட் என்ன செய்துள்ளது?

கடந்த காலங்களில் வட்டி விகித குறைப்புகள், கடன் அடிப்படையிலான சந்தை விரிவாக்கம் போன்றவை செய்யப்பட்டு சந்தையில் தற்காலிக உந்துதல்கள் தரப்பட்டன. ஆனால் தற்போதிருக்கும் பொருளாதார நெருக்கடியின் உக்கிரம் அது போன்ற தீர்வுகளின் வரையறைகளை கடந்ததாக உள்ளது.

பெருக்கல் விளைவுகளை (Multiplier effect) உருவாக்கி கிராக்கியை தூண்டக் கூடிய துறைகளான விவசாயம், கிராமப் புற மேம்பாடு, பெண் நலன், குழந்தைகள் மேம்பாடு போன்றவற்றிற்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் போதுமானதல்ல.

மகாத்மா காந்தி கிராம வேலை உறுதிச் சட்டத்திற்கு ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப்பட்டிருப்பது அரசின் எதிர்மறை அணுகுமுறைக்கு சான்றாகும். 2019-20 ல் திருத்திய மதிப்பீடு ரூ. 71,000 கோடிகளாக இருந்தாலும் 2020-21 க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது ரூ 61,500 கோடிகள் மட்டுமே. இத்திட்டத்திற்காக மாநிலங்களுக்கு தர வேண்டிய மத்திய அரசின் பங்கும் உரிய நேரத்திற்கு செல்வதில்லை. கேரளா கேட்ட தொகையில் 39 சதவீதமே அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவுக்கு 37 சதவீதம், ஆந்திர பிரதேசத்திற்கு 41 சதவீதம், ராஜஸ்தானுக்கு 44 சதவீதம் என்ற நிலைதான் உள்ளது. இத்திட்டத்தை மத்திய அரசு நடத்துகிற விதம் படிப்படியாக இத் திட்டத்தை கைவிடும் அவர்களின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

மாற்றமும் ஏமாற்றமும்

இந்த பட்ஜெட்டில் இரண்டு வகையான வருமான வரி கணக்கீட்டு முறைகள் அறிமுகம் செய்யப்பட்டு, தாமே ஒன்றை தேர்வு செய்துகொள்ளலாம் என வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

முதலாவது, ஏற்கனெவே உள்ள வருமான வரி கழிவுகளை உள்ளடக்கியது. இரண்டாவது அத்தகைய கழிவுகள் ஏதுமில்லாத வரி விகித குறைப்பு முறைமை. இதில் பலருக்கு இரண்டாம் முறைக்கு மாறினால் ஏற்கெனவே கட்டுகிற வரிகளை விட அதிகம் கட்ட வேண்டி வரும். இது போன்ற வருமான வரி சலுகைகள் அதிகமாக மூத்த குடி மக்களுக்கு இருக்கும். அவர்களுக்கு புதிய முறைமை எந்த பலனையும் தராது. இந்த இரண்டாம் முறைமை இந்த பட்ஜெட்டில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை விட இது எதிர்காலத்தில் சலுகைகளே இல்லாத சூழலை நோக்கி நகரப் போகிறது என்பதையும், இல்லங்களின் சேமிப்பு என்கிற வருவாய் ஊற்றையே சந்தைக்காக காவு கொடுக்கப் போகிறது என்பதுமே அது உணர்த்தும் அபாயமாகும்.

என்.ஆர்.ஐ தொழிலாளர் மீதான வரி முன் மொழிவுகள், வரையறைகளில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் சவுதி போன்ற நாடுகளுக்கு பிழைப்பிற்காக சென்றுள்ள சாதாரண, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். எனவேதான் இத்தகைய தொழிலாளர்கள் அதிகம் கொண்டிருக்கும் கேரள மாநிலத்தின் இடது முன்னணி அரசு உடனே எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எல்லாம் இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு சிறப்பு வருமான வரி கழிவுக்கான பிரிவை உருவாக்க வேண்டுமென்று கோரி வந்த நிலையில் இருப்பதையே கேள்விக்கு ஆளாக்குகிற இந்த முன் மொழிவு எதிர்காலத்தில் பெரும் பாதிப்புகளை பொருளாதாரத்தில் ஏற்படுத்தும்.

வஞ்சனை

வருமான திரட்டலில் வஞ்சனையின் உச்சம் வெளிப்பட்டுள்ளது.

கார்ப்பரேட்களுக்கான சலுகைகளும், டிவிடெண்ட் பகிர்மான வரி சலுகையும் ரூ 25,000 கோடி அளவுக்கு அரசின் வருமானத்தில் பள்ளத்தை கூடுதலாக உருவாக்கும். சில குறிப்பிட்ட தொழில்களுக்கு கார்ப்பரேட் வரிகள் 15 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டிலேயே கார்ப்பரேட் வரிகளில் வழங்கப்பட்ட பெரும் சலுகைகள் வரிவருவாயில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த பட்ஜெட் அதை சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 2019 -20 ல் ரூ. 6,10,500 கோடிகள் கார்ப்பரேட் வரிக்கான பட்ஜெட் தொகையாகும். டிசம்பர் வரை வசூலாகியிருந்த தொகை ரூ.3,69,000 கோடிகள் மட்டுமே. இது 60 சதவீதம் மட்டுமே. (2018 டிசம்பரில் 64 சதவீதம்).
கார்ப்பரேட் வரிகள் மட்டுமின்றி மற்ற வரிகளுமே கடுமையான வசூல் பாதிப்புகளை சந்தித்துள்ளன. வருமான வரியில் 57 சதவீதம், ( டிசம்பர் 2018 ல் 64 சதவீதம்) மத்திய ஜி.எஸ்.டி வசூல் 60 சதவீதம் ( டிசம்பர் 2018 ல் 74 சதவீதம்), சுங்க வரி 68 சதவீதம் (2018 டிசம்பரில் 82 சதவீதம்) கலால் வரிகள் 62 சதவீதம் (டிசம்பர் 2018 ல் 67 சதவீதம்).
இந்த வருமான திரட்டல் முறைமை கூட்டாட்சி கோட்பாட்டின் மீதும் தாக்குதல் தொடுக்கிறது. மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு தர வேண்டிய வரி பங்கு ரூ. 8.1 லட்சம் கோடிகள் என்பது 2019-20 பட்ஜெட் மதிப்பீடு. ஆனால் திருத்திய மதிப்பீடு 6.6 லட்சம் கோடிகள்தான். 10 மாநிலங்களுக்கு அவர்களுக்கான பங்கில் சரிவு ஏற்பட்டுள்ளது. 2020- 21 பட்ஜெட் ரூ. 7.8 லட்சம் கோடி தரப்படும் என அறிவித்துள்ளது. இதுவெல்லாம் மலையேறுமா என்பது கேள்விக்குறி. கேரள மாநில அரசு தனது எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்துள்ளது.
இது அரசின் பொருளாதார பாதையின் விளைவு ஆகும். தனது பாதையை மாற்றிக்கொள்ள அரசிடம் எந்த முன்முயற்சியும் இல்லை.
இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசு முன் வைத்துள்ள பட்ஜெட் மொழிவுகள் விபரீதமானவை. தொலை நோக்கு பார்வையற்ற ஒதுக்கீடு வெட்டுகள், மருத்துவத் துறை குறித்த கொள்கை முடிவுகள், சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு குறைப்பு, பொதுத் துறை பங்கு விற்பனை என நகர்ந்துள்ள விதம் பொருளாதார மறு பங்கீட்டில் மிகப் பெரும் வஞ்சனையை செய்துள்ளது.

இந்த பட்ஜெட் தீர்வுகளை நோக்கி நகர்ந்திருக்க வேண்டுமென்றால் பொது முதலீடுகளை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்வதற்கு “சூப்பர் ரிச்” எனப்படும் பெரும் பணக்காரர்கள் மீது வரிகள் போடாமல் செய்ய இயலாது. உலகின் சூப்பர் ரிச் மீது 0.5 சதவீதம் வரி போட்டாலே 26 கோடி குழந்தைகளுக்கு கல்வி தர முடியும். ஆனால் வலதுசாரி பொருளாதார பாதை இத்தகைய மனிதம் கொண்ட பொருளாதார பாதையை நோக்கி தடம் மாறாது. இந்திய பட்ஜெட்டும் விதிவிலக்கல்ல.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.