இந்த புகைப்படம் ஒரு மறக்கமுடியாத புகைப்படமாக மாறிப்போனது. டாக்டர் ஹாதியா அலி என்னும் இந்தோனேசிய நாட்டு மருத்துவர் தன் வீட்டு வாசல் வரை வந்துவிட்டு வீட்டுக்குள் சென்றால் நோய்த் தொற்று தன் குழந்தைகளை பாதிக்கும் என்றெண்ணி வாசலிலிருந்தே குழந்தைகளை பார்த்து பேசிவிட்டு சென்ற போது எடுத்த புகைப்படம்.
இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த ஆறு மருத்துவர்களில் ஒருவர்தான் Dr ஹாதியா அலி. அவர் நோயுற்று தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோது தனது வீட்டிற்கு வந்து மனைவி குழந்தைகளை பார்த்து விட்டு சென்ற காட்சிதான் இந்த புகைப்படம். தனது குடும்பத்தாருக்கு நோய் தொற்றி விட கூடாது என யாரோ ஒரு அந்நியரை போல வாசலுக்கு வெளியே நின்றபடி அவர் பார்க்கும் பார்வை நெஞ்சை உருக்குகிறது.முகம் தெரியாத அந்த குழந்தைகள் நினைவு இதயத்தை நொறுக்குகிறது.
இப்படி உலகெங்கும் கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்களின் தியாகம் மகத்தானது.
https://jakartaglobe.id/news/six-indonesian-doctors-die-from-covid19-cases-exceed-500