விபச்சார ஊடகங்கள்னு ஊடகங்களை திட்டிட்டு அதே ஊடக செய்திகளை சுவைக்கும் இந்த ஐந்துக்களை என்ன சொல்வது விபச்சாரத்திற்க்கும் கீழான வார்த்தை இருந்தால் அது இந்த மக்களையே சாரும்…
வீடு வாசல் இல்லாதவன் என்ன செய்வான் அவனுக்கு அரசாங்கம் என்ன புடுங்குச்சினு எவனாச்சும் யோசிக்கிறானா?
ஒவ்வொருத்தனுக்கும் அவனவன் சொந்த குடும்பத்திற்கு மட்டும் எந்த பிரச்சனையும் இல்லாம இருக்கனும்.
அப்படியே, இந்த அநாதைகள் செத்து விழுந்தால் அதன் மூலமாக நோய் பரவாதா?
அந்த நேரத்தில் விண்வெளி சூட் போட்டு தப்பிச்சிருவீங்களா?
அப்படி பாதுகாப்பாக எத்தனை நாள் வாழப்போறீங்க?
இருக்கும் நாட்களில் இனிமேலாவது அடுத்தவனை பத்தி கொஞ்சம் யோசிங்க.
உங்க குழந்தைகளுக்கு நம்ம குடும்பத்தை காப்பாத்தனும்னு சொல்லித்தராதீங்க ஒட்டுமொத்தமாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு உதவனும்னு சொல்லிக் கொடுங்க.
பரபரனு பொறந்தோம், பரபரனு வாழ்ந்தோம் எதுக்கு சாவறோம்னே தெரியாம சாகுற இந்த நிலமையெல்லாம் நம்ம காலத்திலேயே முடிவுக்கு வரட்டும். அடுத்த தலைமுறையாவது மனிதர்களாக வாழட்டும்…
நான் கொரோனாவால் சாகமாட்டேன். அதற்கு முன்னரே பட்டினியால் செத்துவிடுவேன். நான் இந்த புலம்பலலை ஒரு டஜனுக்கும் மேற்பட்ட முறை பல்வேறு ஆட்களிடம் இருந்து கேட்டுவிட்டேன். நான் பழைய டெல்லியில், உதவியின்றி தவிக்கும், இந்த துன்பத்தை அவர்களிடம் பகிர்ந்துகொள்ள ஆட்கள் இல்லாத நிலையில் அவர்களுக்கு உணவளிக்கும் ஒரு குழுவில் இணைந்துள்ளேன். அங்கு நான் கேட்டதுதான் மேல் சொன்னவை. இப்போது நாங்கள் அனுபவிக்கும் கொடுமையைவிட பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொடுமையானதாக இருக்கவில்லையென்று ஒருவர் கூறுகிறார். இந்த சூழலில் நாம் எவ்வாறு வாழ்வோம் என்று நமக்கு தெரியாது.
எவ்வாறு அவர்கள் ஊரடங்கு தடை இருக்கும்போது மக்கள் பணத்தை தங்கள் வங்கிக்கணக்கில் இருந்து எடுத்துக்கொள்வார்கள்? சாப்பாட்டிற்கே வழியில்லாத மக்களுக்கு, தெருவோர குழந்தைகளுக்கு, வீடற்றவர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு, தொலைதூரத்தில் வசிக்கக்கூடிய பழங்குயினருக்கு வங்கிக்கணக்கோ அல்லது கார்டுகளோ இல்லை. அவர்கள் கதி என்ன ?