அமெரிக்கா ஈரான் மீது 1979 முதல் இதுவரை நான்கு தடவைகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. கடைசியாக 2015 லும் பின் 2018லும் ஈரானுடன் அணுஆயுதத் தடைப் பரவல் ஒப்பந்தம் தோல்வியான பின்பு இன்னும் பல பொருளாதாரத் தடைகளை விதித்தது.
ஈரானுடன் தொழில் உறவு கொள்ளும் கம்பெனிகளை தடை செய்வது முதல், ஈரானுக்கு வெஸ்டர்ன் யூனியன் வழியாக பணம் அனுப்புவதைக் கூட தடை செய்தது அமெரிக்கா. இத்தடையை ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ஆதரித்து வந்தன.
இந்நிலையில் ஈரானில் கொரோனா பாதிப்பில் பல்லாயிரக்கணக்கானோர் இறந்துள்ள நிலையில் பிரிட்டன், பிரானஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் ஈரானுக்கு உதவ முன்வந்துள்ளன.
இந்த மாத ஆரம்பத்தில் இந்த நாடுகள் ஏற்கனவே ஈரானுக்கு 40 கோடி ரூபாய்கள் நிதியுதவி வழங்கியுள்ளன.
இதைத் தொடர்ந்து ஜெர்மனி அனுப்பியுள்ள மருந்துப் பொருட்கள் நேற்று ஈரானைச் சென்றடைந்துள்ளன. அமெரிக்கா விதித்துள்ள தடையை தாண்டி வேறு ஒரு ஐரோப்பிய ஒன்றிய விதியின் கீழ் இந்த உதவிகளைச் செய்வதாக இந்த நாடுகள் தெரிவித்துள்ளன.