கொரோனா ஊரடங்கில் கடைகளை மூட காலதாமதமானதற்காக வியாபாரிகளான ஜெயராஜ் என்கிற வியாபாரியை ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்று அடித்து உதைத்த சாத்தான்குளம் போலீஸ், அதைக் கேட்க போலீஸ் நிலையம் சென்ற அவரது மகன் பென்னிக்ஸையும் பிடித்து லாக்கப்பில் வைத்து இரவு முழுவதும் நிர்வாணமாக நிற்கவைத்து லத்திகளால் அடித்து சித்திரவதை செய்துள்ளனர்.
அத்தோடு நிற்காமல் எப்.ஐ.ஆர் பதிவு செய்து கோயில்பட்டி வரை நூறு கி.மீ தூரம் உள்ள கோர்ட்டுக்கு கொண்டு சென்று மாஜிஸ்டிரேட் முன்பு ஆஜர்படுத்தி அவர்களை ஜெயிலில் அடைத்துள்ளனர். படுகாயங்களோடு ஜெயிலில் அடைக்கப்பட்டவர்களை நேரில் பார்த்தும் அது பற்றி மாஜிஸ்டிரேட் எதுவும் கேட்காமல், அவர்களின் காயங்களைப் பற்றி எதுவும் நடவடிக்கை எடுக்காமல் மாஜிஸ்டிரேட் இந்த கிரிமனல் குற்றத்துக்கு உடந்தையாயுள்ளார்.
அடுத்த நாள், ஆசனவாயில் லட்டியை நுழைத்து சித்திரவதை செய்ததால் குடல் பகுதி கிழிந்த நிலையில் மருத்துவமனையில் மருத்துவர்களால் ஒன்றுமில்லை என்று போலி சர்டிபிகேட் தரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பென்னிக்ஸ் எந்த ட்ரீட்மெண்ட்டும் தரப்படாமல் நாள் முழுவதும் இருந்ததால் ரத்தம் அளவுக்கு மீறி ஆசனவாய் வழியாக வெளியேறி பென்னிக்ஸ் சிறையிலேயே செத்து விழுந்தார்.
இந்தச் சித்திரவதைகளை நேரில் கண்ட சாட்சியாயிருந்த அவரது தந்தை ஜெயராஜூம் அடுத்த சில மணி நேரங்களிலேயே மர்மமாக இறந்து போகிறார்.
இதுபற்றி விளக்கும் காணொலிகள் கீழே..
முன்னாள் சிபிஐ அதிகாரியான ரகோத்தமன் இந்தக் கொலைகளும் அதைத் தொடர்ந்து காவல் துறை என்ன செய்யும் என்று இனி நடக்கப்போகும் காவல்துறை நாடகத்தின் திரைக்கதையையும் அதன் முடிவையும் முன்னதாகவே விளக்குகிறார்.
இதை அரசு வழக்கம் போல் மூடி மறைக்கும். இதற்கு தண்டனையாக காவலர்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச தண்டனையே இடமாற்றம் – ட்ரான்ஸ்பர் என்பதாக இருக்கிறது. நேர்மையாக விசாரணை செய்யாத பட்சத்தில் பிரேத பரிசோதனை அறிக்கைகளை வைத்து இந்தக் காவலர் என்கிற கொலையாளிகளின் மேல் நடவடிக்கை எடுக்கவே வாய்ப்பில்லை என்கிறார் ரகோத்தமன். கீழே அந்த வீடியோ பேட்டியை காணுங்கள்..
போலீஸ் உங்கள் நண்பன் இல்லை. போலீஸ், அரசுகளின் வேட்டை நாய். அது எப்போது வேண்டுமானாலும் உங்களை வேட்டையாடலாம்.