எம்பு – பம்பு – பாம்பு
புவியீர்ப்பு விசைக்கு எதிராக எம்பி எம்பி ஊர்ந்து செல்வதால் எம்பு பம்பாகி பாம்பாகிவிட்டது.
செயலின் காரணமாக அது பெயர் பெற்றது.
Pump என்ற ஆங்கிலச் சொல்லும் பம்பு என்பதன் திரிபே.
நீரை புவியீர்ப்பு விசைக்கு எதிராக இறைக்கப் பயன்பட்டதால் அப்பெயர் பெற்றது.
பாம்பு என்றால் வளைந்து வளைந்து என்றும் பொருள் கொள்ளலாம்.
மூங்கிலின் ஆங்கிலப் பெயர் bamboo என்பதன் ஒலிப்பு எம்பு என்றே ஒலிக்கின்றது.
ஆதிகாலத்திலிருந்து எம்பிக் குதிக்க பயன்பட்டிருக்கும்.
தண்ணீரில் ஊர வைத்தால் வளைந்து வளைந்து கொடுக்கும்.
சூரிய கிரகணம் – சந்திர கிரகணம் – பாம்பு விழுங்குதல்
பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக நிலவானது வளைந்து வளைந்து தன் பாதையில் பயணிக்கிறது.
ஈர்ப்பு விசையில் ஈர்க்கப்படுகிறது. தன் சுழற்சியால் எம்புகிறது.
எம்பிச் செல்லும் நிலவு பாம்பிச் செல்லும் நிலவு சூரியனை மறைக்கும் நிகழ்வை பாம்பு விழுங்குகிறது என மறைபொருளில் ஆகு பெயரால் சொல்லியுள்ளனர் முன்னோர். எம்பு எந்ற சொல்லுக்கும் Jump என்ற சொல்லுக்கும் கூட தொடர்பு இருக்கலாம்.
பாம்பு போன்று வளைந்து வளைந்து வரும் நிலவு மறைக்கிறது என்பதை பாம்பு விழுங்குகிறது என்றனர்.
இவன் என்ன இந்தப் பம்மு பம்முறான் என சொல்கிறோமே…. அது பாம்பு – பம்பு – பம்மு என்றானது தான்.