சோசலிச சோவியத் ருஷ்யாவின் தலைவர் ஸ்டாலின் ஒரு எழுத்தாளனுக்கு அளித்த மரியாதை !
மக்களின் பேரன்பை பெற்ற அந்த எழுத்தாளன் உலகப்புகழ்பெற்ற தாய் நாவலை எழுதிய மக்சீம் கார்க்கி
மக்சீம் கார்க்கி என்பது அவரது புனைபெயர். அதன் பொருள் அதிகபட்சம் கைத்துப்போனவன்.
ஆமாம்…
அந்த உன்னதமான எழுத்தாளன் நாடு முழுதும் அலைந்து திரிந்தவன். ஜார் அரசனின் கீழ் வாழ்ந்த மக்களின் கைத்துப்போன வாழ்க்கையை மக்களோடு மக்களாக இருந்து தானும் துன்புற்றவன்.
அவன் வாழ்ந்த வாழ்க்கையைதான் சாறாக பிழிந்து நாவலாக வடித்துகொடுத்த கலைஞன்.
இலக்கியத்தில் சோசலிச யதார்த்தவாதம் என்ற வகைமையினை தோற்றுவித்த முன்னத்தி ஏர்
அவனது மூளை தனது சிந்தனையை நிறுத்திக்கொண்டபோது அவனது பூத உடலை ஆறாத்துயரத்துடன் தூக்கி செல்கிறார் ஸ்டாலின்.
நாட்டின் மனச்சாட்சியாய் விளங்கும் எழுத்தாளனை கம்யூனிஸ்டுகள் இப்படித்தான் தாங்கி பிடிக்கிறார்கள்.
கேரளத்தில் வைக்கம் முகமது பஷீர் எனும் மக்கள் எழுத்தாளன் காலையில் எழுந்து தனது வீட்டு கதவை திறந்தபோது ஒரு நீண்ட க்யூ வெளியே அவருக்கு பூச்செண்டு கொடுக்க அந்த அதிகாலையிலேயே காத்திருந்தது.
முதல்நாள் இரவுதான் பஷீருக்கு ஞானபீடவிருது அறிவிக்கப்பட்டிருந்தது
அதற்கு அவரை பாராட்டவே அந்த வரிசை
அந்த வரிசையில் அன்றைய கேரள முதல்வர் இ கே நாயனார் எழுபத்திஒன்பதாவது ஆளாக ஒரு பொக்கேயுடன் நின்றுகொண்டிருந்தார்.
எழுத்தாளன் முன் ருஷ்ய அதிபரோ கேரள முதல்வரோ பேரன்பும் உயர்மரியாதையும் பிரியமும் கொண்டிருக்கிறார்கள்.
இது ஒன்றும் அதிசயமில்லை. அதுதான் கம்யூனிச பண்பாடு.
ஆனால் மோடியின் இந்தியாவில் கோவிந்த் பன்சாரே,கல்புர்கி, நரேந்திர தபோல்கர் கௌரி லங்கேஷ் களை பட்டியல் போட்டு வரிசையாக சுட்டுக்கொல்கிறார்கள். அடக்குமுறைச் சட்டம் போட்டு உள்ளே தள்ளுகிறார்கள்.
ஏனெனில் பாசிச மோடியின் இந்தியா கருத்துரிமை, மனிதநேயம் சனநாயகத்திற்கு எதிரானது
சங்கர் மணியன் பதிவிலிருந்து…