சிங்கள பாடகி ஒருவருக்கு ரத்தினக் கம்பள வரவேற்பு அளித்த இசையமைப்பாளர் ஹார்ஸ் ஜெயராஜுக்கும் கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கிக்கும் வலைதளங்களில் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன.
இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி ஆகியோர் இயக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் கதாநாயகனாக நடிக்கும் படம் 2019 டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்தப்படத்தில் புதுமுக நடிகை கீதிகா திவாரி என்பவர் நடிக்கிறார். நடிகர்கள் பிரபு, விவேக், விஜயகுமார், மயில்சாமி, நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்ட பெரிய கூட்டம் இப்படத்தில் இருக்கிறது.
இப்படத்துக்கு சர்ச் பாடல்களை காப்பி அடிப்பதில் மன்னனான ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைக்கிறார். மதன்கார்க்கி மற்றும் அவரது கேடி டாடி வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதுகிறார்கள்.
இப்படத்தில் இடம்பெறவிருக்கும் ஒரு பாடலைப் பாட அண்மையில் புகழ்பெற்றிருக்கும் சிங்களப் பாடகி யோகானியை அழைத்துப் பாட வைத்திருக்கிறார்கள். அக்டொபர் ஆறாம் தேதி அவரை மும்பைக்கு வரவழைத்து மதன்கார்க்கி எழுதிய பாடலைப் பாடவைத்திருக்கிறார்கள்.
அவருடன் ஹாரிஸ்ஜெயராஜ் மற்றும் மதன்கார்க்கி ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை பெருமை பொங்க ஹாரிஸ்ஜெயராஜ் வெளியிட்டுள்ளார்.
அதற்கு ஈழத்தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
…இவா சிங்கள இராணுவ தளபதி பிரசன்ன டி சில்வாவின் மகள்.
சிங்கள இனவெறியர்கள் தமிழர்கள் மீது நடத்திய போரைப் புகழ்ந்து பாடிய பெண்ணை அழைத்து அறிமுகப்படுத்துகிறார்கள். இந்த இழிவுநிலை எந்த இனத்திற்கும் வரக்கூடாது.
தமிழுக்கும், தமிழருக்கும் எதிரானவர்களை தேடி தேடி வாய்ப்பு கொடுப்பது தமிழ் திரை உலகின் சாபக்கேடு. @Jharrisjayaraj இதனை நீங்கள் தெரிந்தே செய்கின்றீர்களா?????? இப்படிப் பல எதிர்ப்புக்குரல்கள் ஒலிக்கின்றன.
இன்னும் சில பதிவுகளில் சரவணா ஸ்டோர்ஸில் தமிழர்கள் யாரும் பொருட்கள் வாங்கக்கூடாது என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
அண்ணாச்சியிடம் பெரும் சம்பளம் வாங்கிக்கொண்டு அவரது தொழிலுக்கே ஆப்பு வைக்கும் ஹாரிஸ் ஜெயராஜும், மதன் கார்க்கியும் அப்பாடலுக்கு தடா போடுவார்களா?