சூர்யா எப்படி வளர்ந்தார் என்று ஊரெல்லாம் தெரிந்த நிலையில், அவரை இந்த அளவுக்கு பெரிய ஆள் ஆக்கிவிட்டது நான் தான் என்று பெருமை பீற்றிக்கொண்டு திரியும் அவரது பினாமி ஞானவேல் ராஜா, அடுத்த படியாக கார்த்திக்கை இன்னும் ரெண்டே படங்களில் நம்பர் டூ [பாத்ரூம் போற அந்த நம்பர் டூ வா?] ஆக்கிக்காட்டுகிறேன்’ என்று தி.நகரில் இருக்கும் மாரியாத்தா கோவிலில் சத்தியம் செய்திருக்கிறாராம்.
இதன் முதல் கட்டமாக, அவரது டார்கெட், அஜீத்தின் ‘பில்லா 2’ படத்தை விட கார்த்தியின் ‘சகுனி’ பெரிய பிஸினஸ் ஆனதுபோல் காட்டுவது.
இரு தினங்களுக்கு முன்பு அஜீத்தின் ‘பில்லா2’ படத்தை சாடிலைட் ரைட்ஸ் இன்றி வெறும் தமிழக தியேட்டர் திரையிடல் உரிமைக்காக மட்டும் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் வாங்கியதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்தி வெளியானது.
அஜீத்தின் சம்பளம் மட்டுமே பத்துக்கோடி எனும்போது, மேலும் பெரும்பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட பில்லா2’ வை 24 கோடிக்கு எப்படி கொடுத்தார்கள் என்னும் கேள்வி ஒருபுறமிருக்க,அந்த செய்தியை ஒட்டி, ஏறத்தாழ அஜீத்திற்கு இணையான பிஸினஸ் கார்த்திக்கு இருப்பது போல, ‘சகுனி’ படத்தை 23 கோடிக்கு விற்றிருப்பதாக ஞானவேல் நரித்தனமாக செய்தி வெளியிட ஆரம்பித்திருக்கிறார்.
உண்மையில், ‘சகுனி’ படத்திற்கு படத்தின் துவக்கத்திலிருந்தே, பெரிய எதிர்பார்ப்பு எதுவும் ஏற்படவேயில்லை. புது இயக்குனரின் இயக்கத்தில் கார்த்தி தலையிட்டது, சில காட்சிகளை ரீ-ஷூட் பண்ணியது, ஏற்கனவே நடித்த இந்தி வில்லன் சலீம் கோஷை மாற்றி, பிரகாஷ் ராஜை வைத்து ரீ-ஷூட் பண்ணியது போன்ற பஞ்சாயத்துக்களால் படத்துக்குநெகடிவ் பப்ளிசிடிகளே அதிகம்.
அதனால் விழியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து யாரும் இந்தப்படத்தை வாங்க முன்வரவில்லை. தானே தியேட்டர்கள் எடுத்து சொந்தமாக ரிலீஸ் பண்ணி, தேவைப்பட்டால் 100 நாட்கள் ஓட்டியும் காட்டமுடியும் என்பதால் ஞானவேல் ராஜா எல்லாரையும் முட்டாளாக்க முயல்கிறார். அதனால் ‘சகுனி 23 கோடிக்கு விலை போனது என்கிற அழுகுனி ஆட்டத்தை ஆட ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள் விபரமான விநியோகஸ்தர்கள்.