தீபாவளி ரேஸ் களைகட்ட ஆரம்பித்துள்ள நிலையில், தனது தயாரிப்பான ‘கும்கி’ குறித்து வதந்திகள் கிளப்பும் வண்டுமுருகன்களால் நொந்து நூலாகியிருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி.
வதந்தி நம்பர் 1. ‘கும்கி’ சில சீன்ஸ் ரீ–ஷூட் போறங்க.
அதனால படம் தீபாவளிக்கு ரிலீஸாகலை.
வதந்தி நம்பர் 2. படம் தீபாவளிக்கு ரிலீஸாகலை. அதனால ரீ–ஷூட் போறாங்க.
கடந்த 48 மணிநேரத்தில் சென்னையைப் பிடித்துக்கொண்ட அடைமழைபோல் இந்தச் செய்தியும் பொழிய ஆரம்பிக்க, ’’தீபாவளிக்கு தியேட்டர் எடுக்கவேண்டிய நேரத்துல எவனுகடா இப்பிடி கிளப்புறது”? என்று நொந்துபோனார்களாம் லிங்குசாமியும், படத்தை ரிலீஸ் பண்ண வாங்கியிருக்கும் ‘சகுனி’ ஞானவேல் ராஜாவும்.’
‘’ரீ–ஷூட் செய்தி சுத்த புல்ஷிட். படத்தோட ஸ்டில் ஷூட் இனி கிடையாது. போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் கூட முடியப்போகுது. ‘கும்கி’ தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுது. பொழுதுபோகாதவன் சொல்ற பேச்சையெல்லாம் தயவுசெய்து யாரும் கேக்காதீங்க’’ என்று தன் பங்குக்கு இயக்குனர் பிரபு சாலமனும் பொறும, இதே தொனியில் தனது ட்விட்டரில் உறும ஆரம்பித்திருக்கிறார் ஹீரோ விக்ரம் பிரபு.
எல்லாமே’ துப்பாக்கி’ பார்ட்டிகளின் துர்பாக்கிய வேலைதான் என்று தெரிந்திருந்தும் நேரடியாக அவர்களோடு மல்லுக்கட்டும் மனநிலையில் இல்லாததால்தான், இந்த பொறுமல் உறுமல் மற்றும் இருமல்களாம்.