’வாயிலேயே வயலின் வாசிப்பது’ என்று சொல்வார்களே அதில் பல விற்பன்னர்கள் நம் கோடம்பாக்கத்தில்தான் இருக்கிறார்கள்.
’வயலின் மட்டுமில்லீங்கோ ஒரு ஆர்கெஸ்ட்ராவே வாசிச்சிக்காட்டுவேன்’ என்று சமீபத்தில் களம்
இறங்கியிருக்கிறார் வி.சி.வடிவுடையான்.
கரணை வைத்து ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ என்ற சுமாரான படம் இயக்கிய இவர், அடுத்து மீண்டும் கரணை வைத்து ‘சொக்கநாதன்’ என்ற படத்தை இயக்கப்போகிறாராம்.
இயக்கிட்டுப்போறாரு, உனக்கென்னப்பா? என்கிறீர்களா?
கரணும், ஒரு கதாநாயகியோ அல்லது இரு கதாநாயகிகளோ கமிட் பண்ணி அவர் இயக்கப்போவதாக அறிவித்திருந்தால், உங்களை மாதிரியே நானும் ஒரு ஓரமா உக்காந்து வேடிக்கை பாத்துட்டு ஒண்ணுஞ்சொல்லாமதான் போயிருப்பேன்.
ஆனால் இவருடைய வித்தியாசமான கதைக்கு, கரண் தவிர்த்து மேலும் பத்து கதாநாயகர்கள் தேவைப்படுகிறார்களாம். கதையின் டிமாண்டாம் அது.
இதுகுறித்து வடிவுடையான் பேசும்போதே’ ஆஸ்கார் வாங்கப்போற படம் இது. அந்த பத்துப்பேரு யாருன்னு முடிவு பண்ணிட்டு மரியாதையா, நீங்களே கியூவுல வந்து நின்னுடுங்க’ என்று நம்ம அஜீத், விஜய்களை அதட்டுவது போலவே இருக்கிறது.
அத்தோடு நின்றாரா, ‘சொக்கநாதர்’ கதையைக்கேட்டு சொக்கிப்போயி, கரீனா கபூரும், வித்யா பாலனும் என் வீட்டுக்கதவையே தட்டிட்டாங்க’ என்று இப்போது புது ரீல் சுத்த ஆரம்பித்திருக்கிறார்.
அப்படியா என்று விசாரித்தால்,கரீனாவும், வித்யா பாலனும், தாங்கள் மட்டும் சிரிக்க முடியாமல், அசிஸ்டெண்ட் வைத்துக்கொண்டு சிரிக்கிறார்களாம்.