கடந்த வெள்ளியன்று ரிலீஸான எட்டுப் படங்களுக்கும் ஒட்டுமொத்த துட்டும் போச்சு கதைதான். அந்தக் கூட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டவர் என்று பார்த்தால் ‘ஆன்டி இண்டியன்’ படத்தை இயக்கிய ப்ளூ சட்டை மாறன் தான் என்கிறது அவரால் அடி வயிற்றில் அடிக்கப்பட்ட சினிமா வட்டாரம்.
தன் படத்துக்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதற்கு சற்றும் குறைச்சலில்லாத அளவுக்கு எதிர்ப்பும் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட ப்ளூ சட்டை, அந்த எதிர்ப்பாளர்களை தவிடுபொடி ஆக்குவதற்காக சுமார் 20க்கும் மேற்பட்ட முறை பிரிவியூ ஷோக்களாகப் போட்டு படம் பார்த்தவர்களுக்கு தயாரிப்பாளர் செலவில் போண்டா, டீகளையும் வழங்கி சுமார் 20 லட்சம் வரை செலவழித்திருக்கிறார்.
அந்த 20 ஷோக்களுமாக சுமார் 2000 பேர் வரை படம் பார்த்த நிலையில், படம் ரிலீஸான முதல் நாளிலிருந்தே அனைத்து தியேட்டர்களிலும் 10 பேர், 20 பேராகப் பார்க்க படம் படுதோல்வி என்று ஆகிவிட்டது. இன்னொரு அஸ்திரமாக அவர் கையிலெடுத்த ‘பி.ஜே.பி.க்காரங்க என் படத்தை போட விடாம மிரட்டுறாங்க’என்கிற பல்டியும் சுத்தமாகப் பிசுபிசுத்துப்போய்விட்டது.
அவர் மீது செம காண்டிலிருந்த சக யூடியூபர்கள் ப்ளூ சட்டையை சாயம் போகிற அளவுக்கு துவைத்து எடுக்க தற்போது பரிதாபமாக முழித்துக்கொண்டிருக்கிறார். ஒருவேளை பிரிவியூ போடாமல் இருந்திருந்தால் அந்த 2000 பேரில் ஒரு 500 பேராவது பார்த்திருப்பார்கள் என்று தயாரிப்பாளர் தற்போது புலம்பிக்கொண்டிருப்பதாகத் தகவல்.
பி.கு: இந்தப் படத்தை பிரிவியூவில் பார்த்து ப்ளூ சட்டைக்காரரைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டதற்காக இயக்குநர் பாரதிராஜா மீது மானநஷ்ட வழக்குப் போடுவது குறித்து இயக்குநர் சங்கத்தில் விவாதம் நடந்து வருவதாக தகவல்.