தீபாவளியெல்லாம் நல்லபடியா முடிஞ்சதா.. எத்தனை வெடி? எத்தனை பலகாரம் ? இந்தப் பவர் கட். 900 ரூபாய் சிலிண்டர். தீபாவளி வெடி விலை எல்லாம் தாண்டி ஒரு வழியா கொண்டாடி முடிச்சாச்சா. என்ன படம் பார்த்தீங்க?
துப்பாக்கி படம் ரிலீஸூக்கு முன்பிருந்தே சிறிய பெரிய சிக்கல்களில் சிக்கித் தவிக்க ஆரம்பித்து அதன் சிக்கல்கள் ரீலீசுக்குப் பின்னும்
தொடர்கிறது.
இது திட்டமிட்டு செய்யப்படுவதா இல்லை படத்தின் துரதிர்ஷடமா தெரியவில்லை.
படம் இன்று தான் ரிலீஸாகி இருக்கிறது. அதற்குள் அதில் முஸ்லீம்களென்றாலே தீவிரவாதிகள் என்று குறிப்பிடுவது போல் வசனம் வந்திருக்கிறதாம் என்று செய்திகள் வருகின்றன.
இதைக் கேள்விப் பட்ட சில முஸ்லீம் அமைப்புக்கள் இதற்கு கண்டனம் தெரிவித்திருப்பதோடு விஜய் மற்றும் முருகதாஸின் வீட்டு முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள் என்றும் செய்தி நொண்டியடிக்கிறது.
நடிகர் விஜய்காந்தின் படங்களில் காஷ்மீர், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் துவங்கி ஈரான் ஈராக் வரை முஸ்லீம்களைத் தீவிரவாதிகள் என்று எத்தனையோ படங்களில் கேவலமாகச் சித்தரித்தும், முஸ்லீம் தீவிரவாதிகளை பந்தாடியும் செய்திராததையா இந்தப் படத்தில் செய்துவிட்டார்கள்?
படத்தைப் பார்த்த யாராவது கொஞ்சம் விளக்குங்களேன்.