‘அவிங்க முதல்லயே சந்தானம்தான்னு ஃபிக்ஸ் ஆயிட்டாங்க. நமக்கு வேண்டாத சில பக்கிப்பயலுகதான் வழக்கம் போல எனக்கு வந்த பட வாய்ப்பு பறிபோன மாதிரி பில்ட்-அப் பண்றதுக்காக ‘ சந்தானமா வடிவேலா?ன்னு ஒரு பட்டி மன்றத்தை
கிளப்பி நம்மள தோக்கடிச்சி சந்தோஷப்படுறாய்ங்க’ என்கிறார் வடிவேலு.
இயக்குனர் பூபதி பாண்டியன் விஷால் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா இணையும் படத்துக்கு காமெடியனாக நியமிக்கப்பட இருப்பது வடிவேலுவா, சந்தானமா என்ற கேள்வி கடந்த பத்து நாட்களாகவே பரபரப்பாக அடிபட்டுவருகிறது.
இந்தச்செய்திக்குமுதலில் மவுனம் காத்து வந்த வடிவேலு தான் உறுதியாக படத்தில் இல்லையென்று தெரிந்தவுடன், ‘புதுரூட்டு’ ஒன்றைக் கண்டுபிடித்து மறுப்பை வெளியிட்டுள்ளார். அதாவது அவிங்க ஆரம்பத்துலருந்தே வடிவேலு பேரையே பரீசீலிக்கவே இல்லையாம்.
இதையே பத்து நாளைக்கு முந்தியே சொல்லியிருந்தா கொஞ்சம் கவுரவமா இருந்திருக்குமே கைப்புள்ள?