ஆமாங்க நெசமாத்தான். ஏற்கனவே இசையமைப்பாளர் அனிருத்துடன் ஆண்ட்ரியா அடித்த லிப் டு லிப் கிஸ் கூட ஒரு அசந்தர்ப்பமான நேரத்தில் தெரியாத்தனமாக நடந்து விட்டது தான்.
அதை ஏதோ பத்திரிக்கைகள் படமெடுத்துப் போட்டு யாருமே உலகில் கிஸ் அடிக்காதது போலவும், ஆண்ட்ரியா மட்டுமே கிஸ் அடித்து குற்றம் செய்து விட்டது போலவும் பெரிது படுத்தி எழுதி விட்டார்கள்.
இப்போது பாருங்கள் ‘என்றென்றும் புன்னகை’ என்கிற படத்தில் படம் வரையும் ஆர்ட் காலேஜ் மாணவர்களுக்கு மாடலிங் செய்யும் பெண்ணாக நடித்திருப்பதை, டைட்டானிக்கில் ஜாக் மற்றும் ரோஸின் நிர்வாணப் போஸ் வரைதல் போல கதை கட்டிவிட்டார்கள்.
இப்படிப் புலம்பித் தவிக்கிறார் நம் ஆண்ட்ரியா. பூனம் பாண்டே போன்ற முற்போக்குப் பெண்களைப் போல ‘முற்றும் ‘ துறந்தவரல்லவே அவர். நம் தமிழ்ச் சினிமாவிலல்லவா இருக்கிறார். அவர் கண்டிப்பாக அப்படியெல்லாம் முற்றும் துறந்து நடிக்கமாட்டார்.
ஆனாலும் அவரின் அன்பு(?!) ரசிகர்களே நீங்கள் மனம் தளர வேண்டாம். ஆண்டவர் உங்களைக் கைவிடவில்லை.
அந்தப் படத்திலேயே சில ஹாட்டான, நெருக்கமான காட்சிகள் அம்மணிக்கு படத்தின் கதைப்படியே வருகின்றனவாம்.
அதனாலே ரசிக மகாசனங்களே இன்னிக்கு ராத்திரியாவது நிம்மதியா தூங்குங்க. ஆண்டவன் கண்டிப்பா கண்ணைத் ‘தொறப்பான்’.