வசந்தின் மூன்று பேர் மூன்று காதல் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது.
இப்படத்தில் அர்ஜூன், சேரன் மற்றும் விமல் தான் அந்த மூன்று பேர். சுர்வீன், லாசினி மற்றும் முக்தா தான்
அந்த மூன்று காதல்கள்.
இவர்கள் காதல்களில் என்ன விசேஷம் அல்லது பிரச்சனை என்பது கதை. உலக சினிமாக்களில் ‘மூன்று சீசன்கள்’ போல படங்கள் இடம் மற்றும் பருவங்களை அடிப்படையாக வைத்து வெளிவந்திருக்கின்றன.
தமிழில் முதன் முதலில் இலக்கியங்களில் வரும் ஐந்து திணைகளில் மூன்று திணைகளான குறிஞ்சி (மலையும் மலை சார்ந்த பகுதியும்), மருதம் (வயலும் வயல் சார்ந்த பகுதியும்), நெய்தல் (கடலும் கடல் சார்ந்த பகுதியும்) ஆகிய திணைகளை அடிப்படையாகக் கொண்டு பாடல்களும், கதையமைப்பும் இருக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.
வசந்த்தின் ரிதம் படத்தில் பஞ்ச பூதங்கள் எனப்படும் நிலம், நீர்,நெருப்பு, ஆகாயம் என்று 5 தீம்களில் பாடல்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.
இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பூவெல்லாம் கேட்டுப் பார், சத்தம் போடாதேக்குப் பின் மீண்டும் இக்கூட்டணி ஒன்று சேர்கிறது.
படத்தின் பாடல்களை நா.முத்துக்குமார் எழுதுகிறார். கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் வசந்த்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, நாகர்கோவில், ஊட்டி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் மும்பையில் நடந்திருக்கிறது.
வசந்த் உங்க டேலண்ட்டுக்கு நீங்க இன்னும் சேலஞ்சிங்கா படம் எடுக்கலாமே. இன்னும் வெறும் காதல் கதை தானா ?