முன்னணி நடிகையாக சில வருடங்களுக்காவது நீடிக்கும் ‘சூட்சுமங்களை’ தெரிந்துகொள்வதற்கு முன்பாகவே சிலர் ரிடையர் ஆகிவிடுகிறார்கள். ஆனால் அந்த விவகாரத்தில் மிக சீக்கிரமே உச்சத்தைத் தொட்ட நம்ம டாப்ஸியை நினைத்து தெலுங்கு நடிகைகளுக்கு கண்,
காது என்று உடம்பின் பல பாகங்களிலிருந்தும் புகை கிளம்பிக்கொண்டிருக்கிறதாம்.
’அப்படி என்னதாங்க செய்யிறாரு டாப்ஸி?’ நீங்கள் கேட்க வேண்டிய நியாயமான கேள்வி.
நடிகைகளைப் பற்றிய கிசுகிசுக்கள் கிளம்பக் காரணமானவர்கள் பெரும்பாலும் அவரது உதவியாளர்கள் மற்றும் டிரைவர்களே. இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுடன் விஷேச ‘டிஸ்கஷன்களுக்குச் செல்லும் தகவலை பெரும்பாலும் வெளியே கசிய விடுவது இவர்களே.
இந்நிலையில் உதவியாளர்களைக் கூட ஈஸியாக கழட்டிவிடும் நடிகைகளால் டிரைவரை மட்டும் கழட்டிவிட முடிவதில்லை.
ஆனால் நுழைந்த சில வருடங்களிலேயே தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் டாப் கியரில் பயணத்தைத் துவக்கிய டாப்ஸி, இடையில் யாருக்கும் தெரியாமல் ரகஸியமாய் செல்ஃப் ட்ரைவிங்கும் கற்றுக்கொண்டுவிட்டாராம். இப்போது தனது பெர்சனல் மீட்டிங்குகளுக்கு டிரைவரைக் கழட்டிவிட்டுவிட்டு, தனியாக தனது பி எம் டபிள்யூ வண்டியில் போய் சம்பந்தப்பட்ட பார்ட்டிகளின் வயிற்றில் பீர் வார்க்கிறாராம் டாக்ஸி.
‘பொறந்து வளர்ந்ததுலருந்து ஹைதராபாத்ல கார் ஓட்டி பழகுன பொண்ணு மாதிரியே அவ்வளவு அசால்டா ஓட்டுறா’ என்று வயிறெரிகிறார்கள் அவரது சக்களத்திகள்.