பையர், வாட்டர் போன்ற பரபரப்புக்கும், எதிர்ப்புக்களுக்கும் பெயர் போன படங்களை எடுத்த தீபா மேத்தா தனது அடுத்த படமான மிட்நைட் சில்ட்ரனில் வம்புக்கிழுத்திருப்பது இந்திரா காந்தியை.
இவரது மிட்நைட் சில்ட்ரன் ஆங்கிலப் படம் கனடாவில் இருந்து இந்த வருடம் வெளியானது. முதல் முறையாக இந்தியாவில் கேரளாவில்
தற்போது நடந்து வரும் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. சர்ச்சைகளுக்குப் புகழ் பெற்ற சால்மன் ருஷ்டியின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது.
படம் திரையிடப்பட்ட மாலையே கேரளா காங்கிரஸின் தலைவர் பாலகிருஷ்ண பிள்ளை இப்படம் இந்திராகாந்தியை இழிவு செய்யும் படம் எனவே காங்கிரஸ் ஆளும் இந்த மாநிலத்தில் இதைத் திரையிட அனுமதித்திருக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
கேரளாவின் மாநில சினிமாத்துறை அமைச்சரும், பால கிருஷ்ண பிள்ளையின் மகனுமான குமார் இதற்கு அவ்வளவு எதிர்ப்பு தேவையில்லை என்று கூறியுள்ளார். ஆனாலும் படத்தின் இறுதியில் இந்திய வரைபடம் காஷ்மீர் இல்லாமல் காட்டப்பட்டிருப்பது வருத்தமாக உள்ளது என்றார்.
இவருக்கும் இவரது தந்தைக்கும் இடையே ஒரு வருடமாகவே கருத்து வேறுபாடுகள். சண்டைகள்.
படம் உண்மையில் ஒரு சிறுபிள்ளைத் தனமான கருத்தை மையமாகக் கொண்டு இயங்குகிறது. அதாவது இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அவருக்கு ஒரு ஜோதிடர் இந்தியா சுதந்திரமடைந்த 1947 ஆகஸ்ட் 15 அன்று இரவு பிறந்தவர்களால் அவருக்கும், அவரது அரசியல் வாழ்வுக்கும் பெரும் தீங்கு வரும் என்று கூறியதன் அடிப்படையில் இந்திரா காந்தி பல தவறான செயல்கள் எமர்ஜென்ஸி உட்பட செய்ததாகவும், மற்றும் இன்னும் அவர் ஒரு மனநோயாளி என்பது போலவும் இப்படியாக இந்திரா காந்தியைப் பற்றி ஒரு தவறான சித்திரம் உருவாக வழி செய்கிறது இந்தப் படம்.
இந்திரா காந்தி தனது அரசியல் வாழ்வில் நிறைய தவறுகள் செய்தவர் தான். அதைக் காட்டுகிறேன் பேர்வழி என்று படம் முழுவதும் நட்டு கழண்ட மனிதர்களாகவே எல்லோரையும் காட்டுகிறதாம் இப்படம்.
காங்கிரஸ்காரர்கள் என்றாலே பொதுவாகவே நட்டு கழண்ட மாதிரிதான் பேசுவார்கள். அது வேறு. ஆனாலும் இந்திரா காந்தி இப்போதைய காங்கிரஸ்காரர்களை விட கொஞ்சம் தெளிவாகத் தான் இருந்தார்.
சாலமன் ருஷ்டி பேசாமல் நமது பேசா ஞானி பிரதமரை வைத்து கதை எழுதியிருக்கலாம். அதன் த்ரில் சஸ்பென்சாக அவர் இருவேடங்களில் ஒன்று ம.மோகனாகவும், இன்னொன்றில் நள்ளிரவில் மட்டும் வரும் சந்திரமுகி மாதிரி சோனிமுகி கேரக்டராகவும் அவர் உருமாறுகிறார் என்று போட்டிருக்கலாம்.
படம் பிச்சிகிட்டு ஓடும் நானூறு நாள்.