நேற்று, வெள்ளிக் கிழமையன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரின் அருகில் இருக்கும் கனெக்டிகட் மாகணாத்தில் இருக்கும் சாண்டி ஹூக் எலிமெண்டரி ஸ்கூலில் நுழைந்த 20 வயது வாலிபன் ஒருவன் குழந்தைகளைப் பார்த்து கண்மூடித்தனமாகச் சுட்டுள்ளான்.
இதில் 18 குழந்தைகளும் 6 பெரியவர்களும் இறந்து போயினர். பல பேர் ஆசிரியர்களும், மாணவர்களும் காயமுற்றுள்ளனர். காயமடைந்தவர்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்த போது துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு வெளியில் வந்த ஆசிரியர்கள் சுதாரித்து ஓடி வந்து வகுப்பறையை மூடிக் கொண்டு மாணவர்களைக் காப்பாற்றியுள்ளனர்.
சுட்ட வாலிபனைச் சுற்றி வளைத்தது போலீஸ் ஆனால் அவன் சரணடையாமல் தொடர்ந்து தன்னிடமிருந்த இரண்டு துப்பாக்கிகளால் தொடர்ந்து சுட்டுக் கொண்டே இருந்திருக்கிறான்.
போலீஸ் திரும்பிச் சுட்டதில் அவன் குண்டடிபட்டு இறந்து போனான். துப்பாக்கிச் சூடு நடந்தற்கான காரணம் தெரியவில்லை. (வழக்கம் போல அவன் ஒரு அரை லூசாக இருக்கக் கூடும் ).
அமெரிக்காவில் இந்த வருடத்தில் இது பள்ளிக்கூடத்தில் நடக்கும் இரண்டாவது துப்பாக்கிச் சூட்டு நிகழ்வாகும். (என்னே பெருமை?)